Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுலிடம் செய்த அதே தவறு.. 2வது டி20க்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கை.. ஹர்திக் செய்வாரா??

ராஞ்சி: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி கே.எல்.ராகுலை வைத்து போட்ட அதே தவறான கணக்கை சுப்மன் கில்லை வைத்து போட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 என ஒயிட் வாஷ் செய்து அசத்திய இந்திய அணி, டி20 தொடரில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்துள்ளது. முதல் டி20ல் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை குவித்தது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியிருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பிட்ச்-ல் ஏற்பட்ட எதிர்பார்க்காத மாற்றம் தான் காரணம் என விளக்கம் அளித்திருந்தார். அதாவது ராஞ்சி மைதானத்தில் 2வது இன்னிங்ஸின் போது அதிக பனிப்பொழிவு இருக்கும். இதனால் பவுலிங் வீசுவது கடினமாகி, பேட்டிங்கிற்கு சாதகமாகும். ஆனால் இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் தான் பந்தில் டேர்னிங் அதிகமாக இருந்தது எனக்கூறினார்.

முக்கிய சிக்கல்

முக்கிய சிக்கல்

இந்நிலையில் உண்மையில் பிட்ச்-ஐ தாண்டி ஹர்திக் பாண்ட்யா சரிசெய்ய வேண்டிய முக்கிய விஷயம் உள்ளது. அது ஓப்பனிங் இடத்தில் களமிறங்கும் சுப்மன் கில் தான். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய போதும், டி20ல் சுப்மன் கில் மோசமாக உள்ளார். இதுவரை ஆடிய 4 இன்னிங்ஸ்களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகியுள்ளார். ஒரே ஒருமுறை 46 ரன்களை அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 117 ஆக மட்டுமே உள்ளது.

டிராவிட்டின் ப்ளான்

டிராவிட்டின் ப்ளான்

ஏற்கனவே ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய போதும், அணியின் காம்போவை மாற்ற வேண்டாம் என டிராவிட் நினைத்து தொடர்ச்சியாக வாய்ப்பு தந்ததால் டி20 உலகக்கோப்பையில் விணை ஏற்பட்டது. தற்போது கே.எல்.ராகுலை விட சுப்மன் கில் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார். இதனால் மீண்டும் அதே தவறை செய்கிறார்கள்.

பிரித்வி ஏன் தேவை

பிரித்வி ஏன் தேவை

மறுபுறம் இளம் வீரர் பிரித்வி ஷா அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். உள்நாட்டு தொடர்களில் அட்டகாசமாக விளையாடியுள்ள பிரித்வி ஷா 152.34 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடுகிறார். முதல் பந்தில் இருந்தே ரன் குவிக்கும் வேகம் அவரிடம் உள்ளது. எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் திறமையாக உள்ள வீரரை தவறான கணக்கு போட்டு டி20 கிரிக்கெட்டில் சேர்ப்பது ஆபத்தானது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Story first published: Saturday, January 28, 2023, 14:18 [IST]
Other articles published on Jan 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+