Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புறக்கணிக்கப்படுகிறாரா இஷாந்த்? இந்திய அணிக்கு காத்திருக்கும் "பல்பு" - புரிந்து கொள்வாரா கோலி?

மும்பை: எங்கு பார்த்தாலும் இஷாந்துக்கு பதில் அவருக்கு வாய்ப்பு, இஷாந்துக்கு பதில் இவருக்கு வாய்ப்பு, இஷாந்துக்கு அணியில் இடம் சந்தேகம் என்பது போன்ற செய்திகளை, தலைப்புகளை அதிகம் காண நேரிடுகிறது. இஷாந்த் என்ன உங்களுக்கு இளக்காரமாகவா போயிட்டார்?

இன்னும் எட்டே நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடங்கவுள்ளது. அதாவது ஜூன் 18ம் தேதி. நியூஸிலாந்துடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மல்லுக்கட்ட இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இங்கிலாந்து பொதுவான ஆடுகளம் என்பதால், போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தவிர, உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணி, நம்பர்.2 டெஸ்ட் அணிகள் மோதுவதால், அதுவும் இறுதிப் போட்டியில் மோதுவதால், வீரர்களுக்கே இந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

 இஷாந்துக்கு பதில் உமேஷ்

இஷாந்துக்கு பதில் உமேஷ்

அதேசமயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி குறித்து, அதாவது இந்திய பிளேயிங் லெவன் குறித்து ஏகப்பட்ட யூகங்கள் தினம் வெளியாகின்றன. இதில், வெளிநாட்டு வீரர்கள், இந்திய மூத்த வீரர்கள் என்று பலரும் தங்களுக்கு பிடித்த சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அதில் எந்தவொரு பிளேயிங் லெவனிலும் இஷாந்த் ஷர்மாவின் பெயர் இடம் பெறவில்லை. இடம் பெறாதது கூட பெரிய விஷயமல்ல. இஷாந்துக்கு பதில் சிராஜ். இஷாந்துக்கு பதில் உமேஷ் என்று அனைத்து எக்ஸ்பெர்ட்ஸ்களும் இஷாந்துக்கு பதில் யார் என்பதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

 அதிகபட்ச விக்கெட்

அதிகபட்ச விக்கெட்

இஷாந்த் என்ன இந்திய அணிக்கு அவ்வளவு கிள்ளுக்கீரையாக போய்விட்டாரா? வெளிநாடுகளில் இஷாந்த் ஷர்மாவின் பவுலிங் எபிலிட்டி என்னவென்று தெரியுமா? நீங்கள் கூறுகின்ற SENA நாடுகளில் அவர் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு ஏன்.. டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அவர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டே இப்போது இந்திய அணி காலடி எடுத்து வைத்திருக்கும் இங்கிலாந்தில் தான் என்பதாவது அவர்களுக்கு தெரியுமா?

 இந்தியாவின் சொத்து

இந்தியாவின் சொத்து

ஒரு ஃபாஸ்ட் பவுலராக டெஸ்ட் போட்டிகளில் 50 மேட்சை கடப்பதே பெரும் போராட்டம். இவர் 100 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இது ஒரு பேட்ஸ்மேன் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு சமம். 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இவரது கைகள் சுழன்றிருக்கின்றன என்றால், இவர் நிச்சயம் இந்தியாவின் சொத்து என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக, வெளிநாடுகளில் மட்டும் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் மொத்தம் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகள் 199. ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கை 303.

 7 விக்கெட்டுகள்

7 விக்கெட்டுகள்

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடும் SENA-வில் அவர் மொத்த கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 112. அதாவது, வெளிநாடுகளில் அவர் கைப்பற்றிய 199 விக்கெட்டுகளில், இந்த மெகா நான்கு நாடுகளில் மட்டும் அவர் பெற்ற விக்கெட்டுகள் 112. அதிலும், குறிப்பாக இப்போது இந்திய அணி களமிறங்கி இருக்கும் இங்கிலாந்தில் அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை வாரிக் குவித்திருக்கிறார். SENA நாடுகளில் அவர் அதிகம் கைப்பற்றிய விக்கெட்டுகள் இங்கிலாந்தில் தான். அதிலும், 2014ல் நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு வெற்றித் தேடி தந்தவர் இஷாந்த்.

 அனுபவமும் முக்கியம்

அனுபவமும் முக்கியம்

சிராஜ் மீது எந்த குறையும் இல்லை. ஆஸ்திரேலிய தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. அந்தத்தொடரின் லீடிங் விக்கெட் டேக்கர் அவர் தான். அதற்காக இப்போது இங்கிலாந்தில் இஷாந்துக்கு பதில் சிராஜ் என்பதெல்லாம் டூ டூ மச். 'சிராஜை அணியில் சேர்ப்பது ஏன்?' என்பது பற்றியல்ல நமது வாதம். இஷாந்துக்கு பதிலாக சேர்ப்பது ஏன்? என்பதே கேள்வி. ஒரு பவுலர் அண்மை போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார் என்பதற்காக, பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிநாடுகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் இஷாந்த் போன்ற பவுலர்களை அணியில் இருந்து வெளியே உட்கார வைக்கலாம் என்று நினைத்தால், அது Back Fire ஆவதை எவராலும் தடுக்க முடியாது. அதிரடி, அதகளம் முக்கியமே. அதற்காக அனுபவத்தை விட்டுச் செல்ல நினைத்தால் வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்.

Story first published: Thursday, June 10, 2021, 20:59 [IST]
Other articles published on Jun 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+