Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப் யாதவிற்கு என்னாச்சு? இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசாதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீசவில்லை. இதனால் அவருக்கு காயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் மத்தியில் கவலை எழுந்தது. இதற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சாய்ராஜ் பகுதுலே கூறியதாவது, "குல்தீப் யாதவிற்கு எந்தவித காயமும் இல்லை. அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. இந்த 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் அவர் ஏற்கனவே 18 ஓவர்கள் வரை வீசியுள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் அவர் 2 முதல் 3 ஓவர்கள் வரை வீசி பயிற்சி பெற்றார்.

Is Kuldeep Yadav injured He didn t bowl in second innings against Sri Lanka XI Sairaj Bahutule explains

இதனால் அவரது பணிச்சுமையை மேலாண்மை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து பந்துவீசிய பிறகு, அவரது உடல்நிலை எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவே இந்த ஓய்வு வழங்கப்பட்டது. அவர் சிறந்த முறையில் பந்துவீசி உள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த போட்டியில் போதிய வாய்ப்பு வழங்கப்பட்டது. ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர் ஆகியோர் தலா 14 முதல் 15 ஓவர்கள் வரை வீசினர். சரண்ஷ் ஜெயினுக்கும் பந்துவீச வாய்ப்பு கிடைத்தது.
முதல் நாளில் தட்டையாக இருந்த ஆடுகளம், அடுத்தடுத்த நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது. இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. காலே மைதானத்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்த ஆடுகளத்த்தில் ஆடியது இந்திய அணிக்கு பெரிதும் உதவும்." என்றார் சாய்ராஜ் பகுதுலே.

சர்ஃபராஸ் கானுக்கு ஜாக்பாட்.. இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு.. இலங்கை தொடரில் சேர்ப்பு

சர்ஃபராஸ் கானுக்கு ஜாக்பாட்.. இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு.. இலங்கை தொடரில் சேர்ப்பு

இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கையின் சுழற்பந்து வீச்சு சூழலுக்கு பழகிக் கொள்ள இந்த போட்டி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. குல்தீப் யாதவ் உடற்தகுதியுடன் இருப்பது இந்திய அணிக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Story first published: Monday, August 10, 2026, 7:49 [IST]
Other articles published on Aug 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+