Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்திலேயே சிகரெட் கேட்பதா.. ஆஸ்திரேலிய வீரர் செய்த விஷயம்.. காரணம் கேட்டு திகைத்த ரசிகர்கள்!

சிட்னி: தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே களத்திலேயே சிகரட் மற்றும் லைட்டரை கேட்டது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த சூழலில் தான் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விநோத நிகழ்வு

விநோத நிகழ்வு

இந்நிலையில் இந்த போட்டியின் போது புதுவித சம்பவம் அரங்கேறியிருக்கிறது. வழக்கமாக களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் தண்ணீர், கிளவுஸ், பேட், பேடுகள் ஆகியவையை கேட்பதை பார்த்திருப்போம். ஆனால் இன்று ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே வித்தியாசமாக சிகரெட் மற்றும் சிகரெட் லைட்டர் வேண்டும் என செய்கை காட்டியதால் ரசிகர்கள் குழம்பினர். என்ன ஆனது என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் ஒரு காரணத்திற்காக தான் மார்னஸ் அதை கேட்டுள்ளார். அதாவது மார்னஸின் ஹெல்மெட்டில் உள்ள பிளாஸ்டிக் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. இதனால் தொந்தரவாக நினைத்த அவர், சிகரெட் லைட்டர் மூலம் பிளாஸ்டிக்கை சூட்டை ஏற்படுத்தி சரி செய்ய நினைத்தார். லைட்டர் வேண்டும் என்பதை புரியவைப்பதற்காகவே சிகரெட்டை செய்கை காட்டியிருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

போட்டியின் நிலவரம்

போட்டியின் நிலவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ஓப்பனிங் வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களுக்கெல்லாம் அவுட்டானார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மன் கவாஜா மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டு வருகின்றனர்.

 ஸ்கோர் விவரங்கள்

ஸ்கோர் விவரங்கள்

சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 121 பந்துகளில் 54 ரன்களுடன் களத்தில் நாட் அவுட்டாகாமல் இருக்கிறார். மறுமுனையில் மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்களை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

Story first published: Wednesday, January 4, 2023, 16:57 [IST]
Other articles published on Jan 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+