Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் சீட் பெல்ட் அணியவில்லையா??.. தீப்பற்றிய காரில் இருந்து தப்பியது எப்படி? முழு விவரம்

ரூர்கி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பெரும் விபத்தில் இருந்து தப்பித்ததது எப்படி? அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தாரா? இல்லையா? விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றாரா? என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாளின் தொடக்கமே சோக செய்தியாக, ரிஷப் பண்ட்-ன் கார் விபத்து அமைந்தது. உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அவர் ரூர்கி நகரத்தின் அருகே விபத்தில் சிக்கினார்.

இதனையடுத்து பலத்த காயங்களுடன் தவித்துவந்த ரிஷப் பண்ட்-ஐ உள்ளூர் போலீசாரும், பொதுமக்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு சுமார் 400 கிமீ தூரம் தனி நபராக காரை ஓட்டி வந்த ரிஷப் பண்ட், தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட், கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்துள்ளார். அதன்பின்னர் தான் அவரை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

விதிமுறையை மீறினாரா

விதிமுறையை மீறினாரா

இந்நிலையில் ரிஷப் பண்ட் சீட் பெல்ட் அணிந்தாரா இல்லையா என்ற குழப்பம் எழுந்துள்ளது. பண்ட் சென்றது டேராடூன் நெடுஞ்சாலை என்பதால் சுமார் 100 கிமீ வேகத்தில் பயணித்திருப்பார். அந்த வேகத்தில் செல்லும் கார் சீட் பெல்ட் அணியாமல் விபத்திற்கு உள்ளாகியிருந்தால், நிச்சயம் மண்டையில் பெரிய காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே விபரீதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் தலையில் பெரிய தாக்கங்கள் எதுவும் இல்லாமல் சுயநினைவுடன் இருந்துள்ளார். இதனால் அவர் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார் எனத்தெரியவருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இதுகுறித்து முதற்கட்ட தகவலை கொடுத்த போலீசார், ரிஷப் பண்ட் இரவு முழுவதும் உறக்கமின்றி தனியாளாக காரை ஓட்டி வந்துள்ளார். சாலையில் பனிமூட்டம் எதுவும் இல்லாததால், அவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார் எனக்கூறியுள்ளனர். மேலும் கார் தீப்பிடித்ததை அடுத்து அவர், கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவ அறிக்கை

மருத்துவ அறிக்கை

காரில் இருந்த 7 ஏர் பேக்-களும் வேலை செய்திருப்பதாக தான் தெரிகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ரிஷப் பண்ட்-ன் வலது முழங்காலில் உள்ள தசை நார் மட்டுமே கிழிந்துள்ளது. நெற்றி, வலது மணிக்கட்டு, கணுக்கால், கட்டை விரலில் மட்டுமே சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதே போல முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ளது சிராய்ப்புகள் தான் என்றும் தீக்காயங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்ட் விதிமுறைகளை பின்பற்றி தான் சென்றுள்ளார் எனத்தெரிகிறது.

Story first published: Friday, December 30, 2022, 18:12 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+