இருக்கா? இல்லையா? மீண்டும் மலர்கிறதா சுப்மன் கில் - சாரா காதல்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், காதலர் தினத்திற்காக போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவால் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மகளுடனான காதல் விவாதம் சூடுபிடித்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விளையாட்டு துறையிலும் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் உள்ளிட்ட பல வீரர்கள் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா - நடாஷா ஜோடி இன்று மீண்டும் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்படி இருக்கையில் இளம் வீரர் சுப்மன் கில் தனது காதல் கதையை மீண்டும் ஓபன் செய்துள்ளது பேசுப்பொருளாகியுள்ளது.

சுப்மன் கில் போஸ்ட்
சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுகுறித்த புகைப்படங்களும் பரவின. எனினும் கடந்தாண்டு அவர்கள் காதல் முறிந்ததாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போலவே சுப்மன் கில்லின் இன்ஸ்டா பதிவுகளும் இருந்தன.

மீண்டும் காதல்
இந்நிலையில் மீண்டும் காதல் கதையை தொடங்கியுள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏதோ ஒரு ரெஸ்டாரண்டில் காஃபி குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இது என்ன நாளாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படம் என்று எடுக்கப்பட்டது கேட்டுள்ளார்.

விடை என்ன தெரியுமா?
இதற்கு பதில் சாரா டெண்டுல்கர் கடந்த 2021ம் ஆண்டு போட்ட இன்ஸ்டா பதிவு தான். சுப்மன் கில் உட்கார்ந்திருப்பது லண்டனில் உள்ள ஒரு பிரபல இத்தாலியன் ரெஸ்டாரெண்ட் தான். சாரா டெண்டுல்கர் கடந்த 2021ம் ஆண்டு இதே ரெஸ்டாரெண்டில் சிந்தித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், ஹே சிரி, எனது உணவு எங்கே? என கேப்ஷன் எழுதியிருந்தார்.

2 ஆண்டுக்கு பின் விடை
அப்போது சாரா டெண்டுல்கருக்கு எதிரே அமர்ந்து அந்த புகைப்படத்தை எடுத்தவர் சுப்மன் கில் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது 2 வருடத்திற்கு முன்பு எடுத்த தனது புகைப்படத்தை சுப்மன் கில் இன்று தான் வெளியிட்டிருக்கிறார். இதே போல இது எந்த நாள் என்று தெரிகிறதா? என கேட்டு சாரா டெண்டுல்கர் யோசிப்பதை போன்றே ஒரு எமோஜியையும் பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் சுப்மன் கில்லின் காதல் மீண்டும் மலர்கிறதா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications