Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"நீங்க சிங்கிளா?" - ஒரே பதிலில்.. கேள்வி கேட்டவரை "ஆஃப்" செய்த ஷுப்மன் கில்

மும்பை: இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, கல்யாணம் ஆகும் வரை எப்போதும் மவுசு தான். அப்படி ஒரு மவுசு நிறைந்த மாஸான வீரர் ஷுப்மன் கில், இந்த கேள்விக்கு என்ன பதில் அளித்திருக்கிறார் தெரியுமா?

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கையளிக்கும் ஓப்பனராக விளையாடி வருபவர் ஷுப்மன் கில். ஐபிஎல் போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும், டெஸ்ட் போட்டியில் இவரது ஆட்டத்திறன் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதில், சுப்மன் மீதான எதிர்பார்ப்பு தனி ரகம் எனலாம். இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 34.36. பெஸ்ட் ஸ்கோர் 91. மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார்.

 ஸ்டைலிஷ் வீரர்

ஸ்டைலிஷ் வீரர்

எந்த போட்டியிலும் அச்சப்படாமல், மிக நேர்த்தியாகவே ஷாட்ஸ்களை தேர்வு செய்து ஆடுவது இவரது ஸ்டைல். கில் அடித்த மூன்று அரைசதங்களும் ஸ்டைலிஷானவை. ஆனால், சதமாக கன்வெர்ட் செய்வதில் தான் கோட்டை விட்டார். எனினும், பிசிசிஐ இவர் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்துள்ளது. அதிலும், ப்ரித்வி ஷா தொடர்ந்து சொதப்ப, வாய்ப்பு அவரது வீட்டுக் கதவை வாலண்டரியாக தட்டிக் கொண்டிருக்கிறது.

 என்ஜாய் எஞ்சாமி

என்ஜாய் எஞ்சாமி

குறிப்பாக, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸி., மண்ணிலேயே அந்நாட்டின் பவுலர்களை ஓட விட்டார். 3 போட்டிகளில் 259 ரன்கள். பெஸ்ட் ஸ்கோர் 91. பேட்டிங் ஆவரேஜ் 51.80. அனைத்திலும் கிளாஸ் அண்ட் மாஸ் கலந்து கலவை. எல்லாவற்றையும் விட கான்ஃபிடன்ட். தன் மேல் அவர் வைத்திருக்கும் அந்த கான்ஃபிடன்ட் ஒவ்வொரு இன்னிங்ஸின் ஒவ்வொரு பந்திலும் பேசியது. தன்னால் சதம் அடிக்க முடியவில்லை என்றோ, தவறான ஷாட்ஸ் அடித்து அவுட்டாகிவிட்டோமே என்ற கவலையோ அவரிடம் துளியும் இல்லை. களத்தில் நிற்கும் வரை என்ஜாய் செய்கிறார். அவர் வயதை ஒத்த ப்ரித்வி ஷா-விடம் இல்லாத குணம் இதுதான்.

 சிங்கிளா?

சிங்கிளா?

ஆஸ்திரேலியாவில் தான் காட்டிய அதே பெர்ஃபாமன்ஸை, அப்படியே இங்கிலாந்திலும் கேரி ஃபார்வர்டு செய்வார் என்று பிசிசிஐ நம்புகிறது. ரசிகர்கள் நம்புகிறார்கள். நாமும் தான். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்த ஷுப்மனிடம், ரசிகர் ஒருவர், "நீங்கள் சிங்கிளா? அல்லது கமிட்டடா? என்று கேள்வி எழுப்பினார்.

 டோட்டல் ஆஃப்

டோட்டல் ஆஃப்

இதற்கு, "ஆம் நான் இன்னும் சிங்கிள் தான். அதேசமயம், எதிர்காலத்தில் கமிட் ஆகும் எந்த எண்ணமும் என்னிடம் இல்லை" என்று ரிப்ளை அளித்துள்ளார் கில். முன்னதாக ஐவரும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் டேட்டிங் செல்கிறார்கள் என்று மும்பை முழுவதும் புகைய, அப்படியே அந்த விஷயம் ஆறப்போடப்பட்டது. இப்போதும் மீண்டும் அந்த மேட்டர் எழ, டோட்டலாக ஆஃப் செய்துவிட்டார்.

பொழச்சுக்குவார்!

Story first published: Saturday, May 29, 2021, 19:42 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+