Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னை பார்க்காம தோனி ஏங்கிப் போய் கிடக்காரே.. சாக்ஷி தோனி போட்ட போட்டோ.. செம வைரல்!

ராஞ்சி : சுதந்திர தினத்தன்று தோனி ஓய்வை அறிவித்த நிலையில், அதே நாளில் தோனி தனக்கான பரிசை வாங்கி உள்ளார்.

தோனியின் மனைவி சாக்ஷி இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் இடையே வைரல் ஆகி வருகிறது.

தோனி

தோனி

தோனி 2019 உலகக்கோப்பை அரை இறுதிக்கு பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. பல மாதங்களாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த அவர் 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்தார். அதற்காக ஆகஸ்ட் 14 அன்று சென்னை வந்தார் தோனி.

ஓய்வு

ஓய்வு

ஆகஸ்ட் 15 அன்று பயிற்சியை துவக்கிய அவர், அதே நாளில் தன் ஓய்வு முடிவை அறிவித்து அதிர வைத்தார். சுதந்திர தினத்தன்று சென்னையில் ஓய்வை அறிவித்த தோனி, தன் சொந்த ஊரான ராஞ்சியில் தனக்கான பரிசை "ஆர்டர்" போட்டு விட்டு தான் வந்துள்ளார்.

என்ன பரிசு?

என்ன பரிசு?

ஆம், 1970ஐ சேர்ந்த ஒரு வின்டேஜ் கார் ஒன்றை சுதந்திர தினத்தில் தனக்கு கிடைக்கும் வகையில் வாங்கி இருக்கிறார் தோனி. "ட்ரான்ஸ் ஆம்" என அழைக்கப்படும் போன்டியாக் ஃபையர்பேர்டு காரை தான் தோனி வாங்கி இருக்கிறார்.

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

1970களை சேர்ந்த அந்த கார் உற்பத்தி எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. எனினும், வின்டேஜ் கார் வகைகளில் தனி இடத்தை பெற்றுள்ளது அந்த கார். அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தீவிரமான கார், பைக் ரசிகரான தோனி தனக்கென ஒரு ட்ரான்ஸ் ஆம் கரை வாங்கி உள்ளார்.

பழைய கார்

பழைய கார்

தற்போது பழைய கார்களை மட்டுமே வாங்க முடியும். பழைய கார் என்பதால் தற்போதைய நிலைக்கு ஏற்ப அதன் விலை இருக்கும். சமீபத்தில் இதே மாடல் கார் 68.31 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. தோனி எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார் என்பது தெரியவில்லை.

தோனி இல்லை

தோனி இல்லை

வெளிநாட்டில் இருந்து தோனி அந்த காரை வாங்கி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அந்த கார் தோனி இல்லாத போது அவரது வீட்டிற்கு வந்ததை அடுத்து அதைப் பெற்ற அவரது மனைவி சாக்ஷி அந்த காரின் போட்டோ மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்

ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்

மேலும், "மாஹி இதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்" என்றும் கூறி உள்ளார். தோனி ரசிகர்கள் இந்த கார் வீடியோவை லட்சக்கணக்கில் லைக் செய்து பகிர்ந்துள்ளனர். தோனி பைக்குகளையும் அதிக அளவில் வாங்கிக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 18, 2020, 20:07 [IST]
Other articles published on Aug 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+