Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி ஓய்வு அறிவிப்பு??.. தோனியின் பாணியில் கூறிய தகவல்.. குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!

மும்பை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் ஸ்டைலிலேயே விராட் கோலியும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து 3 வாரங்கள் ஆகிவிட்ட போதும், அதில் ஏற்பட்ட தாக்கம் மட்டும் இன்னும் இந்திய ரசிகர்களிடம் இருந்தும் நீங்கவே இல்லை.

இந்திய அணியின் தோல்விக்கு காரணமானவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அதற்கேற்றார் போலவே தேர்வுக்குழுவை நீக்கி பிசிசிஐ அதிரடி காட்டியது.

பிசிசிஐ-ன் நடவடிக்கை

பிசிசிஐ-ன் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து வீரர்களின் மீது கவனம் திரும்பியுள்ளது. இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட வீரர்களை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூறிவிட்டு, பெரிய ஃபார்மெட்களில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தவுள்ளது. குறிப்பாக நல்ல ஃபார்மில் உள்ள விராட் கோலிக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு வருகிறது.

ஓய்வுபெறுகிறாரா கோலி?

ஓய்வுபெறுகிறாரா கோலி?

இந்நிலையில் கோலி போட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. களத்தை விட்டு வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், அதில், " அக்டோபர் 23, 2022 ( டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் போட்டி ) என்னுடைய மனதில் மிகவும் ஸ்பெஷலான தருணமாகும். என் கிரிக்கெட் பயணத்தில் அது போன்ற ஒரு உணர்வும், புத்துணர்ச்சியும் கிடைத்ததே இல்லை. அன்றைய தினம் மறக்க முடியாத ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக கோலி ஒன் மேன் ஆர்மியாக போராடி போட்டி தான் அது. இதனை ஏன் தற்போது திடீரென பதிவிட்டுள்ளார் என்று பார்த்தால், தோனி தான் காரணமாக இருக்கிறார். தோனியும் தனது ஓய்வு அறிவிப்பை இதே போன்ற இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு புகைப்படத்தை போட்டு தான் அறிவித்திருந்தார். தற்போது கோலியும் அதே பாணியில் கூறுகிறார் என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடரில் தான் கம்பேக் கொடுத்தார். அதில் தொடங்கி டி20 உலகக்கோப்பையிலும் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே பெருமையுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, November 26, 2022, 15:47 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+