Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் இருந்து விராட் கோலி விலகலா?.. வர்ணனையாளரின் ட்வீட்டால் சர்ச்சை.. கடைசியில் ட்விஸ்ட்!

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Recommended Video

Asia Cup 2022: Pakistan Team-ன் SWOT Analysis! | Aanee's Appeal | *Cricket

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் இந்திய ரசிகர்கள் அனைவரின் பார்வையும் விராட் கோலியின் மீதுதான் திரும்பியுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி நீண்ட ஓய்வுக்கு பிறகு நேரடியாக ஆசிய கோப்பைக்கு வந்துள்ளார். இதில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இனி வரும் டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒருமாத காலமாக தீவிர பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்டு வருகிறார். ரசிகர்களும் அவரின் கம்பேக்கிற்காக எதிர்பார்த்துள்ளனர்.

விராட் கோலி விலகல்?

விராட் கோலி விலகல்?

இந்நிலையில் திடீரென கோலி ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. பிரபல வர்ணனையாளர் ரோஷன் அபேசிஜ்ங்கே இதுகுறித்து நேற்று ட்வீட் செய்திருந்தார். அதில்" காயம் காரணமாக விராட் கோலி ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும், அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் சேர்க்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

ஆனால் கடைசியில் தான் பெரும் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. ரோஷன் தனது ட்வீட்டை சில மணி நேரங்களிலேயே நீக்கிவிட்டார். மேலும்" விராட் கோலி குறித்த செய்திகள் தவறான ஒன்று என்றும், அந்த ட்வீட்டை நான் நீக்கிவிட்டேன், யாரும் பதற்றப்பட வேண்டாம் என பதிவிட்டார். இதனை பார்த்த பிறகு தான் ரசிகர்களுக்கு நிம்மதியே வந்துள்ளது.

கோலியின் நிலைமை

கோலியின் நிலைமை

விராட் கோலி தற்போது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீப காலமாக கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிகமுறை அவுட்டாவதால், வலைபயிற்சியில் முன்னணி ஸ்பின்னர்கள் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோரின் பவுலிங்கில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Story first published: Friday, August 26, 2022, 12:42 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+