
ஃபிட்னஸில் உச்சம்
சிறுவயதில் சற்று புஷ்டியான உடலமைப்பு கொண்டவர் தான் விராட் கோலி. சற்று கொழு கொழு நபராக தான் இருந்தார். விளையாட்டு அவரை மாற்றியது. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்கேற்ப தன்னை செதுக்கி வருகிறார். அவரது ஒவ்வொரு உணவும், கலோரிகள் கணக்கிட்டே தயாரிக்கப்படுகிறது. அவர் உட்கொள்ளும் எந்தவொரு உணவாக இருந்தாலும், அது அவரது உடலுக்கு தேவையானதா என்று கண்டறிந்த பிறகே கொடுக்கப்படும். அவ்வளவு உஷாராக தனது ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், உண்மையை சொல்லப்போனால், அந்த அளவுக்கு ஒருவர் பார்த்து பார்த்து உண்பது என்பது எளிதான விஷயம் அல்ல. சாமானியர்களால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

கடுமையான ஒர்க் அவுட்
இதில், இன்னொரு நல்ல விஷயம் என்னவெனில், டீமில் உள்ள மற்றவர்களும், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பவர் கோலி. கேப்டனே இவ்வளவு ஒர்க் அவுட் செய்கிறார், அப்படியெனில் நாமும் அதிகம் மெனெக்கெட வேண்டும் என்று ஒவ்வொரு வீரரையும் நினைக்க வைத்துவிடுகிறார். அந்த பாஸிட்டிவிட்டியை அப்படியே அவர் அணிக்குள் பரவ வைத்துவிடுகிறார். இவ்வளவு ஃபிட்டாக இருக்கும் கோலி, தினம் சராசரி மனிதர்கள் குடிக்கும் தண்ணீரை குடிப்பதில்லை. அதற்கு பதில் "பிளாக் வாட்டர்" எனப்படும் கருப்பு நீரை தான் குடித்து வருகிறார். இந்த கருப்பு நீரானது சாதாரண நீரை காட்டிலும் அதிக ஆற்றலை கொடுக்கிறதாம். இந்த நீரில் இயற்கையான கருப்பு காரச்சத்து உள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பந்து வீசும்போதும், ஃபீல்டிங் செய்யும்போதும், பேட்டிங் செய்யும்போதும் அவர்களது உடலில் இருந்து அதிகப்படியான நீர் வியர்வையாக வெளியேறுகிறது. இதனால், உடலில் உள்ள நீரின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கருப்பு நீர் உதவி செய்கிறது. உடலில் உள்ள பி.எச். அளவையும் இந்த நீர் அதிகரிக்கிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி, இந்த கருப்பு நீர் தோலுக்கும் மிக ஆரோக்கியமானது என்றும் கூறுகின்றனர். பொதுவாக நீரை ஃபில்ட்டர் செய்யும்போது அதில் இருக்கும் மினரல் சத்துகள் வடிகட்டப்படுகின்றன. இதனால் முழுமையான மினரல் சத்துகள் நமக்கு நீரில் இருந்து கிடைக்காமல் போகிறது. ஆனால், பிளாக் வாட்டர் மினரல் வாட்டர் மிகுதியான மினரல் சத்துகள் இயற்கையான முறையில் ஃபில்ட்டர் செய்யப்பட்டு கிடைக்கிறது.

மைக்ரோ-க்ளஸ்ட்டர்
பொதுவாக நாம் அருந்தும் நீரில் pH அளவு 6.5-7.5 என்று இருக்கும். கோடை அல்லது குளிர்காலத்தில் இந்த அளவு மாறுபடும். ஆலம், குளோரின் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அகற்றப்படும். இந்த கருப்பு நீரில் pH அளவு 7.5 ஐ விட அதிகமாக உள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது, இது நம் உடலில் இருந்து அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது மைக்ரோ-க்ளஸ்ட்டர் ஆகும், எனவே இது உயிரணுக்களுக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு அதன் மூலம் சிறந்த நீரேற்றத்தை வழங்குகிறது. எனினும், இதை அருந்த விரும்புவோர், மருத்துவர்களின் அறிவுரைப்படி அருந்துவது நல்லது. பாலிவுட் நடிகைகளான மலைகா அரோரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சிலரும் இந்த பிளாக் வாட்டரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

எவியன் வாட்டர்
இவ்வளவு சத்துக்களையும் கொண்ட இந்த பிளாக் வாட்டர் விலை என்ன தெரியுமா? ரூ.3000 டூ 4000 வரை விற்கப்படுகிறதாம். அதாவது, ஒரு லிட்டர் பிளாக் வாட்டரில் விலை ரூ.4,000 வரை விற்கப்படுகிறதாம். ஒரு சாதாரண குடிநீர் பாட்டிலின் விலை ரூ.15 அல்லது 20 ரூபாய்க்கு விற்கப்படும். அதிலிருந்து, கிட்டத்தட்ட 200 மடங்கு அதிகமாக இந்த பிளாக் வாட்டர் விலை விற்கப்படுகிறது. இதற்கு முன்பாக, விராட் கோலி பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவியன் என்ற குடிநீரை குடித்து வந்தார். அதன் விலை லிட்டருக்கு ரூபாய் 600 என்று விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications