
வங்கதேச அணி புகார்
இந்நிலையில் தோல்விக்கு பிறகு வங்கதேச அணியால் பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கதேச அணியின் இன்னிங்ஸ்-ன் போது விராட் கோலி தனது கைகளில் பந்து இல்லாமலேயே ரன் அவுட் செய்ய முயல்வது போன்று நடித்து பேட்ஸ்மேனை குழப்பினார் என ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விராட் கோலி செயல்
ஆட்டத்தின் 7வது ஓவரில் அக்ஷர் வீசிய பந்தை லிண்டன் தாஸ் ஆஃப் சைடில் அடித்துவிட்டு ரன் ஓடினார். பந்து நேராக பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது. அதனை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் நடுவே இருந்த விராட் கோலி, பந்து தன் கையில் இல்லை என்ற போதும், நான் ஸ்ட்ரைக்கர் எண்டிற்கு த்ரோ செய்வது போன்று ஏமாற்றினார். இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.

விதிமுறைகள் என்ன
ஐசிசி விதிமுறைகளின் படி விராட் கோலி செய்தது முக்கிய தவறாகும். ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது போன்றவை தவறாகும். இதற்கு நோபால் கொடுக்கப்படும். அந்தவகையில் பார்த்தால் நேற்று கோலியின் செயலுக்காக நோ பால் கொடுக்கப்பட்டு, 5 ரன்கள் பெனால்டியாக வந்திருக்கும்.

இனி நடவடிக்கை
விராட் கோலியின் செயலை பார்த்த கேப்டன் சகிப் அல் ஹசன், கள நடுவர்களிடம் விதிமுறை மீறல் தானே அது எனக் கோரினார். ஆனால் அவர்கள் கவனிக்காததால் எந்தவித நோ பாலும் கொடுக்கப்படவில்லை. எனவே கோலிக்கு வேறு ஏதாவது வகையில் தண்டனை கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications