Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கிட்ட கத்துக்க எவ்வளவோ இருக்கு.. ஆனா இவர் என்ன கத்துக்கிறாருன்னு பாருங்க மக்களே!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் நியூசிலாந்து வீரர் இஷ் சோதி தோனி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

தோனி கிரிக்கெட்டில் தெளிவான மனம் கொண்டிருக்கிறார் என கூறிய சோதி, தோனியிடம் குறிப்பிட்ட விஷயம் ஒன்றை தான் கற்றுக் கொண்டு வருவதாக கூறி உள்ளார்.

தோனியின் திட்டம்

தோனியின் திட்டம்

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கேப்டனாகவும், வீரராகவும், திட்டமிட்டு செயல்படும் தோனி, தன் திட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். குறிப்பாக போட்டியில் வெற்றி பெற நிதானத்தை கடைபிடித்து வருகிறார்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தாலும், இரண்டாவதாக சேஸிங் செய்தாலும், தோனி முதலில் நிதானமாக ரன் சேர்ப்பார். பின்னர் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டி கூடுதல் ரன் சேர்ப்பார். இந்த விஷயத்தைதான் தோனியிடம் கற்றுக் கொள்வதாக கூறுகிறார் இஷ் சோதி.

வேகத்தை குறைக்கிறார்

வேகத்தை குறைக்கிறார்

இது குறித்து பேசிய இஷ் சோதி, "தோனி உண்மையிலேயே போட்டியின் வேகத்தை குறைத்து விடுகிறார். தான் என்ன செய்ய வேண்டும் என புரிந்து கொண்டு, அதை செய்ய அவர் முயற்சிக்கிறார். தோனியை பார்த்து அதை கற்றுக் கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்" என்று கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

தோனியின் இந்த நிதான முறை, பல ரசிகர்களால், முன்னாள் வீரர்களால், விமர்சனம் செய்யப்படுவதுண்டு. குறிப்பாக, இந்திய அணி தோல்வி அடையும் போட்டிகளில், தோனி நிதான ஆட்டம் ஆடி இருந்தால், தோல்விக்கு அவர் தான் காரணம் என கூறப்படும்.

இதையா கற்றுக் கொள்கிறார்?

இதையா கற்றுக் கொள்கிறார்?

இந்த நிலையில், தோனியிடம் கற்றுக் கொள்ள எத்தனையோ விஷயம் இருந்தும், நிதானமாக ஆடுவது எப்படி, போட்டியின் வேகத்தை குறைப்பது எப்படி என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் இஷ் சோதி.

Story first published: Tuesday, April 16, 2019, 15:13 [IST]
Other articles published on Apr 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+