
ரசிகரின் கோரிக்கை
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக இரட்டை சதம் என இரண்டு சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இஷான் கிஷன் இருக்கிறார். இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியில் விளையாட வந்த இஷான் கிஷனிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். தனது மொபைல் போன் பின் பகுதியில் கையெழுத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அப்போது போனை வாங்கி பார்த்த போது தான் இஷான் கிஷனுக்கு தெரிந்தது அதில் தோனியின் கையெழுத்து இருந்தது என்று..

ஷாக்கான இஷான்
உடனே இதனை பார்த்து ஷாக்கான இஷான் கிஷன், அதில் தோனி பாயின் கையெழுத்து இருக்கிறது. என்னை ஏன் அதற்கு மேலே உள்ள இடத்தில் கையெழுத்துப் போட சொல்கிறீர்கள். அதை என்னால் செய்ய முடியாது. என்ன காரணத்திற்காக என்னை தோனியின் கையெழுத்துக்கு மேலே போட சொல்கிறீர்கள். வேறு இடம் இருந்தால் சொல்லுங்கள் நான் அங்கு கையெழுத்து போடுகிறேன். தோனி கையெழுத்துக்கு மேல் கையெழுத்து போடும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை.

உரிய மரியாதை
நான் அவருடைய கையெழுத்துக்கு கீழே உள்ள இடத்திலே நான் போடுகிறேன். அதுதான் அவருக்கு உரிய மரியாதை என்று இஷான் கிஷன் கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் ஒரு நாள் அணியில் என்னுடைய இடம் உறுதி ஆகிவிட்டதா என்று எனக்கு தெரியாது.

பேட் தான் பேசனும்
இதைப் பற்றி எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. எனக்கு எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அதனை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்பு பற்றி நான் பேசக்கூடாது. எனது பேட் மட்டும் தான் பேச வேண்டும். எனக்கு இடம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து என்னுடைய பேட் தான் பதிலளிக்க வேண்டும். பஇரட்டை சதம் அடித்து விட்டதால் என்ன நடக்கும் என்று யாருக்கு தான் தெரியும் என்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











