For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷான் கிஷானின் ருத்ர தாண்டவம்.. கோலி போட்ட பக்கா ஸ்கெட்ச்.. வங்கதேசத்திற்கு நம்ப முடியாத இலக்கு!

சட்டாகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று சட்டாகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி தான். தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 3 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்திய அணி 15 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இஷான் கிஷானின் ஆட்டம்

இஷான் கிஷானின் ஆட்டம்

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி - இஷான் கிஷான் ஜோடி வங்கதேச அணியை விழிப்பிதுங்க வைத்தனர். ஒருபுறம் விராட் கோலி நிதானமாக விளையாட, மறுபுறம் இஷான் கிஷான் வாணவேடிக்கை காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 85 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். இது வந்த அடுத்த 18 பந்துகளில் 150 ரன்களை குவித்துவிட்டார்.

அட்டகாச இரட்டை சதம்

அட்டகாச இரட்டை சதம்

150 ரன்களை அடித்த பிறகாவது இஷான் கிஷானின் வேகம் குறையும் என எதிர்பார்த்த சூழலில், அதன்பின்னர் தான் ருத்ர தாண்டவமே ஆரம்பித்தது. வங்கதேச பவுலிங்கை நாளாபுறமும் சிக்ஸர்கள், பவுண்டரிகளாக சிதறடித்த இஷான் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 4வது இந்தியர் என்ற பெருமையை இஷான் கிஷான் பெற்றார்.

கோலி சதம்

கோலி சதம்

இஷான் கிஷானுக்கு உறுதுணையாக நின்று விளையாடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்களை குவித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 44வது சதம் இதுவாகும். இஷான் கிஷான் 131 பந்துகளில் 210 ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டிற்கு 290 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

சொதப்பிய மிடில் ஆர்டர்

சொதப்பிய மிடில் ஆர்டர்

கோலி - இஷானின் பார்ட்னர்ஷிப் உடைந்த பிறகு இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. அவர்களுக்கு பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 3, கே.எல்.ராகுல் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 20 ரன்களும் அடித்து ஓரளவிற்கு ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. இந்த இமாலய இலக்கை வங்கதேசம் விரட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, December 10, 2022, 15:44 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Ishan kishan and virat kohli helps Team India to give 410 runs target for Bangladesh in 3rd ODI match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+