Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஓவரில் இஷான் கிஷனின் சாதனை.. இலங்கை வீரரை வெளுத்து வாங்கினார்.. சுப்மான் கில் ஏமாற்றம்

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது இன்னிங்சை அதிரடியாக தொடங்கினர். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

கடந்த 6 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒரு டி20 போட்டியில் கூட இலங்கை அணி வென்றது இல்லை. இதனை மாற்றும் உத்வேகத்துடன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி களமிறங்கியது.

இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் சுப்மான் கில், சிவம் மவி ஆகியோர் அறிமுக வீரராக தங்களது முதல் போட்டியிவ் களமிறங்கினர்.

இஷான் கிஷன் அதிரடி

இஷான் கிஷன் அதிரடி

இந்திய டி20 அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து ரோகித் , கேஎல் ராகுல் ஆகியோருக்கு மாற்றாக சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். பழைய ஜோடி செய்த தவறை தாமும் செய்ய கூடாது என்பதை இஷான் கிஷன் உறுதியாக இருந்தார்.

 16 ரன்கள்

16 ரன்கள்

இலங்கை அணியின் காசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். முதல் பந்தில் டபுள்ஸ் என தொடங்கிய இஷான் கிஷன், மூன்றாவது பந்தில் சிக்சருக்கு விளாசினார். இதே போன்று கடைசி 2 பந்திலும், பவுண்டரிக்கு இஷான் கிஷன் அடிக்க, முதல் ஓவரில் அவர் மட்டும் 16 ரன்கள் அடித்தார்.

டாப் 4

டாப் 4

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முதல் இடத்தில் 18 ரன்களுடன் சேவாக்கும், 2வது இடத்தில் 17 ரன்களுடன் ரோகித் சர்மாவும், 16 மற்றும் 15 ரன்களுடன் மூன்றாவது மற்றும் 4வது இடத்தில் இஷான் கிஷன் உள்ளார்.

சுப்மான் கில் ஏமாற்றம்

சுப்மான் கில் ஏமாற்றம்

இதே போன்று தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய சுப்மான் கில், ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 7 ரன்கள் எடுத்திருந்த போது அவர் மகீண் தீக்சனா சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அது தெளிவாக அவுட் என தெரிந்தும், ரிவியூ கேட்டு வீணடித்தார்.

Story first published: Tuesday, January 3, 2023, 19:57 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+