Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷான் கிஷன் குறித்து தோனி சொன்னது என்ன? தம்பிக்காக அண்ணன் செய்த தியாகம்.. பயிற்சியாளர் கருத்து

ராஞ்சி : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் இசான் கிஷன் 210 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

126 பந்துகளில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

இந்த நிலை சாதனை குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் உட்டம் மஜும்தர், இஷான் கிஷன் செய்த பயிற்சி குறித்து விவரித்துள்ளார்.

 தோனியின் வார்த்தை

தோனியின் வார்த்தை

இஷான் கிஷன் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பே தோனி அவருடைய ஆட்டத்தை பார்த்திருக்கிறார். அப்போது இது போன்ற திறமை வாய்ந்த வீரர் இந்திய அணிக்காக விளையாடாமல் போனால் அது இஷான் கிஷன் அவருடைய திறமைக்கு செய்யும் அநீதியாகும் என்று கூறினார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்த வீரராக இஷான் சிறுவயதில் இருந்து விளங்கினார். இஷான் கிஷன் சகோதரர் ராஜ் கிஷன், திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரராக விளங்கினார்.

அண்ணனின் தியாகம்

அண்ணனின் தியாகம்

ஆனால் அவர்களுடைய பெற்றோர் ஏதேனும் ஒரு மகன் தான் கிரிக்கெட்டுக்கு செல்ல வேண்டும், மற்றொருவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கட்டளையிட்டார்கள். இதனால் தன்னுடைய தம்பிக்காக தன்னுடைய கனவை ராஜ் கிஷன் தியாகம் செய்துவிட்டு மருத்துவ படிப்பை மேற்கொண்டார். இஷான் கிஷன் முதல் நாள் என்னிடம் பயிற்சிக்காக வந்த போது சிறுவனாக இருந்தார்.அப்போது நான் அவருக்கு under arm ball தான் வீசுவேன்.

மாதக் கணக்கில் பயிற்சி

மாதக் கணக்கில் பயிற்சி

அதில் அவர் சிறப்பாக கவர் டிரைவ் ஆடினார். அப்போதே நான் தெரிந்து கொண்டேன், ஆறு வயதில் இவருக்கு நிறைய திறமை இருக்கிறது என்று நினைத்தேன். இன்று இஷான் கிஷன் 10 சிக்சர்கள் அடித்தது மட்டும்தான் தெரியும். ஆனால் அதற்காக அவர் எப்படி பயிற்சி மேற்கொண்டார் என்று உங்களுக்கு தெரியாது.அவர் சிக்ஸர் அடிக்க அதிக சக்தியை செலவழிக்கிறார். அது ஒரே இரவில் நடக்கவில்லை.மாதக்கணக்கில் இதற்காக இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டார் .

600 பந்துகள் எதிர்கொள்வார்

600 பந்துகள் எதிர்கொள்வார்

தினமும் இரண்டு செஷன் பேட்டிங் விளையாடுவார். இதில் ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 600 பந்துகளை அவர் வலைப்பயிற்சியில் எதிர்கொள்வார். இதில் 200 பந்துகளை சிக்ஸர் அடிக்க மட்டும் இஷான் கிஷன் கவனம் செலுத்துவார். பெரிய ஷாட் தொடர்ந்து அவர் பயிற்சி செய்து வந்தார். 24 வயதில் அவர் பல உயரத்தையும் சறுக்கலையும் சந்தித்து விட்டதால் அவர் மனதளவில் பலமாக விளங்குகிறார். நான் அவரிடம் எப்போதுமே கூறுவேன். நடந்து முடிந்ததை நினைத்து கவலைப்படவோ மகிழ்ச்சியோ அடையக் கூடாது. தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று நான் கூறுவேன்.

Story first published: Sunday, December 11, 2022, 15:35 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+