Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரண அடி அடித்த இஷான் கிஷன்.. ஆர்சிபி-யை ரவுண்டு கட்டி அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 231 ரன்கள்

லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் அதிரடியாக ஆடி ரன் குவித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 34 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்களும், அனிகேட் வர்மா 9 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர்.

Ishan Kishan Heroics SRH Posts 231 Against RCB in IPL 2025

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்த நிலையில், இஷான் கிஷன் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். 195.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தார். இதை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இஷான் கிஷன், அதன் பிறகு மிகவும் சொதப்பலாகவே ஆடி வந்தார். முதல் சதம் அடித்த பிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் இஷான் கிஷனால் சரியாக ரன் குவிக்க முடியவில்லை.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய இந்த 12வது லீக் போட்டியில் மீண்டும் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இஷான் கிஷன், மொத்தம் 325 ரன்கள் எடுத்துள்ளார்.

எனினும், அவரது ரன் குவிப்பின் பெரும்பகுதி முதல் போட்டியில் அடித்த சதம் மற்றும் இப்போது அடித்த 94 ரன்கள் மூலமே வந்துள்ளது. இந்த இரண்டு பெரிய இன்னிங்ஸ்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், மீதமுள்ள 10 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 125 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 23, 2025, 21:33 [IST]
Other articles published on May 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+