Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக திரும்பிய இஷான் கிஷன்.. இனி தான் ரன் வேட்டை இருக்கு.. என்ன நடந்தது?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷன் அண்மையில் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் ஊர் சுற்றியதே காரணம் என்று கூறப்பட்டது.

முதலில் தென்னாப்பிரிக்கா தொடரில் இடம் பெற்றிருந்த இஷான் கிஷன் தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதால் ஓய்வு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து பிசிசிஐ ஓய்வு வழங்கிய நிலையில் அவர் எந்த உள்ளூர் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார்.

cricket Ishan Kishan virat kohli

இந்த நிலையில் இஷான் கிஷன் இடத்திற்கு துருவ் ஜூரல் வந்துவிட்டார். மேலும் காயத்தால் ஒரு ஆண்டு வரை விளையாடாமல் இருந்த ரிஷப் பண்டும், அணியில் தற்போது திரும்பிவிட்டார். இதனால் இசான் கிஷனின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறது என்று கேள்வி எழுந்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 போன்ற தொடர்களில் கூட இசான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் புதிய சீசன் தற்போது தொடங்கப்பட உள்ள நிலையில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்கு இசான் கிஷன் தயாராகிவிட்டார். இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போட்டிகளுக்கு ஒரு பயிற்சி களமாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் புச்சி பாபு தொடர் கருதப்படும். இந்த தொடரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கு பெறுவார்கள்.

இதில் தற்போது ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இசான் கிஷன் திரும்பி இருக்கிறார். ரஞ்சிப் போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட இசான் கிஷன் தயாராகி வரும் நிலையில் புச்சி பாபு தொடர் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் வாரிய நிர்வாகி இசான் கிஷனின் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் அவர் அணிக்கு திரும்ப தயாராகி விட்டாரா இல்லையா என்ற கேள்வி தான் இருந்தது. முதலில் நாங்கள் அவருடைய பெயரை சேர்க்கவில்லை. ஏனென்றால் அவர் எங்களிடம் எதுவும் பேசாமல் இருந்தார். தற்போது இசான் கிஷன் எங்களை தொடர்பு கொண்டு தான் அணிக்கு வர விரும்புவதாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இசான் கிஷனை நாங்கள் கேப்டனாக நியமித்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார். இந்திய அணி அடுத்த ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ள நிலையில் அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 13, 2024, 21:48 [IST]
Other articles published on Aug 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+