Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

31 ஆண்டுகளாக பெருமை.. இஷான் கிஷானுக்கு அடித்த அதிர்ஷடம்.. முதல் ஒருநாள் போட்டியில் சுவாரஸ்யம்!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுவாரஸ்ய பெருமையுடன் அறிமுகமாகியுள்ளார் இஷான் கிஷான்.

Recommended Video

Prithvi Shaw and Ishan Kishan played career best innings | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் 2 வீரர்களுக்கு தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 முதல் போட்டி

முதல் போட்டி

20 பேர் கொண்ட இந்திய அணியில் 6 வீரர்கள் தங்களது அறிமுக போட்டிக்காக காத்திருந்தனர். இதில் இருந்து ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய இளம் வீரர் இஷான் கிஷானுக்கு தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இதில் சுவாரஸ்ய விஷயம் ஒன்றும் நடந்துள்ளது. இஷான் கிஷான் இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பிறந்தநாளன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமான 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு குர்ஷாரன் சிங் தனது 27வது பிறந்தநாளன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.

சூர்யகுமார்

சூர்யகுமார்

இதே போல மற்றொரு நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவுக்கு தனது முதல் சரவதேச ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் நீண்ட நாட்களாக சர்வதேச வாய்ப்புக்காக காத்திருந்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடு வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல்போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். எனவே இன்றைய போட்டியிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

சர்வதேச வாய்ப்புக்காக நீண்ட வருடங்களாக காத்திருந்த இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அவர்கள் இதில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 18, 2021, 16:14 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+