Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்பிஐ வங்கியில் பணிபுரியும் பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பாட்னா: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உதவி மேலாளராகத் தனது பணியை மீண்டும் தொடங்கியுள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இசான் கிஷன் தற்போது ஓய்வில் உள்ளார்.

sports quota கீழ் பாட்னாவில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் இஷான் கிஷனுக்கு இந்த பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் இந்தியா இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், இசான் கிஷன் அந்த அணியில் இடம் பெறாததால், அவர் பாட்னாவில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் தனது அலுவல் ரீதியான பணிகளுக்கு திரும்பியுள்ளார்.

Ishan Kishan

இருப்பினும், இந்த இந்திய நட்சத்திர வீரர் மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு, தற்காலிகமாக மட்டுமே தனது அரசுப் பணிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இஷான் கிஷன், அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அகர்காருக்கு ஆப்பு ரெடி.. புதிய தேர்வுக்குழுத் தலைவராக ஜாம்பவான் வீரர் நியமிக்கப்பட வாய்ப்பு

அகர்காருக்கு ஆப்பு ரெடி.. புதிய தேர்வுக்குழுத் தலைவராக ஜாம்பவான் வீரர் நியமிக்கப்பட வாய்ப்பு

அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் 78 ரன்களும், 32 ஒருநாள் போட்டிகளில் 42.57 சராசரியுடன் 1107 ரன்களும் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டைச் சதம், இரண்டு சதங்கள் மற்றும் ஏழு அரைசதங்கள் அடங்கும். மேலும் விளையாடிய 55 டி20 போட்டிகளில் 29.77 சராசரி மற்றும் 146.31 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1608 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும்.

ரோகித் சர்மா மீது கை வைத்த அகார்கர்.. இப்போ பதவிக்கே ஆபத்து.. கடுப்பான பிசிசிஐ

Also Read

ரோகித் சர்மா மீது கை வைத்த அகார்கர்.. இப்போ பதவிக்கே ஆபத்து.. கடுப்பான பிசிசிஐ

இஷான் கிஷன் விரைவில் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்ப உள்ளார். வரவிருக்கும் துலீப் டிராபி 2026 தொடரில் கிழக்கு மண்டல அணியை இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வழிநடத்த உள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிஓஇ மைதானம் 2-ல் ஆகஸ்ட் 23, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் கிழக்கு மண்டல அணி, வடகிழக்கு மண்டல அணியை எதிர்கொள்கிறது.

Story first published: Wednesday, August 5, 2026, 16:11 [IST]
Other articles published on Aug 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+