Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக போட்டி... த்ரில் ஆட்டம்... ஆட்டநாயகன் விருது... வேறென்ன வேணும்... கலக்கல் இஷான்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியின்மூலம் சர்வதேச டி20 போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தை ஆடிய இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கி 56 ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது டி20 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்றைய தினம் நடைபெற்ற 2வது போட்டியில் அபார வெற்றி கொண்டுள்ளது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, சிறப்பான பௌலிங்கை அளித்து ரன்களை சுருக்கியது. 5 பௌலர்களை கொண்டு நேற்றைய தினம் போட்டி எதிர்கொள்ளப்பட்டது. அந்த பௌலர்களை சிறப்பாக கையாண்ட கோலி, எதிரணி வீரர்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார்.

கிஷன் அறிமுக போட்டி

கிஷன் அறிமுக போட்டி

இதையடுத்து 165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களிலேயே அதை அடைந்து சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது. இந்த போட்டியின்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது அறிமுக ஆட்டத்தை ஆடிய இஷான் கிஷன் துவக்க வீரராக கேஎல் ராகுலுடன் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

அதிரடி காட்டிய கிஷன்

அதிரடி காட்டிய கிஷன்

அவரது ஆட்டத்தில் சிக்ஸ், பவுண்டரிகள் என பறந்தது. துவக்க வீரர் என்ற நினைவே இல்லாமல் அதிரடி காட்டினார் கிஷன். இதையடுத்து 32 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்திற்கு பரிசாக தனது முதல் அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை அவர் தட்டி சென்றுள்ளார்.

Story first published: Monday, March 15, 2021, 10:27 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+