“தெரியாம எதையும் பேசாதீங்க”.. ரிஷப் பண்ட் உடன் மோதல்?.. வெளிப்படையாக பேசிய இஷான் கிஷான்!
மும்பை: ரிஷப் பண்ட்-ன் இடத்திற்கு இஷான் கிஷான் ஆசைப்பட்டாரா என்ற சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.
இதில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்ற போதும், இஷான் கிஷான் மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

இஷான் கிஷான் சொதப்பல்
இந்த 3 போட்டிகளிலுமே கே.எல்.ராகுல் இல்லாததால், இளம் வீரர் இஷான் கிஷான் தான் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். 3 போட்டிகளிலும் அவர் 35, 2, 34 என ரன்களை குவித்தார். இதில் 2 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழே தான் இருந்தது. எனினும் அவரின் ரன்விகிதம் சிறப்பாக இருப்பதால் இலங்கை தொடருக்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.

புரளிகள்
இலங்கை தொடருக்கான அணியில் பண்ட்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரின் இடத்திற்கு இஷான் கிஷான் வர முயற்சிக்கிறார். இருவருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அவரை போன்றே அதிரடி காட்டி ரன்களை குவிக்க திட்டமிட்டு வருவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் இஷான் கிஷான் முடிவு கட்டியுள்ளார்.

விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், என்னையும் ரிஷப் பண்ட்-ஐயும் நீங்கள் எப்போதுமே ஒன்றாக சுற்றித் திரிவதை பார்க்கலாம். அவர் எனது சிறந்த நண்பர். எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பது, கிரிக்கெட்டை பற்றி பேசுவது என இருப்போம். எங்களுக்குள் இப்படி ஒரு ஆசை எனக்கூறுவது சிரிப்பாக இருக்கிறது.
Recommended Video

இடம் கன்ஃபார்ம்
அவரின் இடத்திற்கு என்றுமே நான் ஆசைப்பட்டதில்லை. அதே போல தான் அவரும். எங்களுக்கு கிரிக்கெட் ஆடவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கிருந்து போட்டிப்போடுவது என வெளிப்படையாக பேசியுள்ளார் இஷான் கிஷான். ஆனால் இலங்கை தொடரில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என இருவருமே இல்லாததால் இஷான் தான் விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார்.


Click it and Unblock the Notifications