Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

300 ரன்கள் அடிச்சி இருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேன்.. கோலி சொன்ன முக்கிய அட்வைஸ் - இஷான் கிஷன் கருத்து

சிட்டங்காங் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 409 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறது.

இதன் மூலம் வங்கதேச மண்ணில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.

இந்தியாவின் இந்த முக்கிய சாதனைக்கு காரணம் இசான் கிஷனின் அதிரடி இரட்டை சதம் தான் காரணம்.

 முடிவு செய்தோம்

முடிவு செய்தோம்

அதிவேகமாக இரட்டை சதம், குறைந்த வயதில் இரட்டை சதம் என பல சாதனைகளை இஷான் கிஷன் படைத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஷான் கிஷன், இன்று நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது.

300 ரன்கள்

300 ரன்கள்

இதனால் அதிரடியாக ஆட வேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டு தான் களத்திற்கு வந்தேன். சச்சின், ஷேவாக் ,ரோகித் ஆகியோர் பெயர் அடங்கிய பட்டியலில் எனது பெயரும் சேர்ந்து இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஆசீர்வதிக்கப்பட்ட வீரராக உணர்கிறேன். நான் ஆட்டம் இழக்கும் போது இன்னும் 15 ஓவர்கள் எஞ்சி இருந்தது.நான் முழுமையாக பேட்டிங் செய்திருந்தால் 300 ரன்கள் கூட அடித்திருக்க முடியும்.

கோலி அறிவுரை

கோலி அறிவுரை

ஆனால் தவறு செய்து விட்டேன். நான் 90 ரன்கள் அடித்து இருக்கும் போது சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன். அப்போது களத்தில் நின்ற விராட் கோலி எனக்கு அறிவுரை வழங்கினார். முதல் சதம் அடிக்க வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது. இதனால் பொறுமையாக விளையாடி சதத்தை அடித்து விட்டு பிறகு அதிரடியாக ஆடு என்று விராட் கோலி என்னிடம் கூறினார்.

சூர்யகுமாரின் அட்வைஸ்

சூர்யகுமாரின் அட்வைஸ்

மேலும் எந்த பந்துவீச்சாளரை அடிக்க வேண்டும் எப்போது அடிக்க வேண்டும் என எனக்கு களத்தில் அவர் ஐடியா கொடுத்துக் கொண்டே இருந்தார். இதன் காரணமாக என்னுடைய பணி எளிதாக இருந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே நான் மைதானத்திற்கு வந்து பயிற்சியை தொடங்கி விட்டேன். இது சூரியகுமாரி எனக்கு கொடுத்த ஐடியா. போட்டி தொடங்குவதற்கு முன்பு இதுபோல் நாம் வலை பயிற்சியில் ஈடுபட்டால் பேட்டிங் செய்யும்போது நமக்கு எளிதாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார்.

வாய்ப்பை பயன்படுத்தினேன்

வாய்ப்பை பயன்படுத்தினேன்

இதை இன்று பின்பற்றினேன். எனக்கு நல்ல வித்தியாசம் தெரிந்தது. எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். என் மீது நான் பெரிய அழுத்தத்தை எல்லாம் சுமத்தி கொள்ளவில்லை. இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடிந்தால் மகிழ்ச்சியே என்று கூறினார். ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் , இஷான் கிஷனுக்கு இரண்டு மாதத்திற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 10, 2022, 16:05 [IST]
Other articles published on Dec 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+