Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சிறப்பா விளையாடுனதுக்கு இஷான் கிஷன்தான் காரணம்... ஆதர்டன் சொல்லியிருக்காரு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி முறையே 56 மற்றும் 73 ரன்களை குவித்துள்ளனர்.

இந்நிலையில் இஷான் கிஷன் பயமின்றி ஆடியதால் விராட் கோலியும் எந்த நெருக்கடியும் இல்லாமல் இயல்பாக விளையாட முடிந்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. கடந்த முதல் போட்டியில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இஷான் கிஷன் அபாரம்

இஷான் கிஷன் அபாரம்

இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியில் துவக்க வீரராக விளையாடினார். ஆயினும் எந்தவித அச்சமும் இன்றி சிறப்பாக விளையாடி 56 ரன்களை குவித்தார். அவர் மற்றும் ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கேப்டன் விராட் கோலியும் 73 ரன்களை குவித்தார்.

கோலி ஆட்டத்திற்கு காரணம்

கோலி ஆட்டத்திற்கு காரணம்

இந்நிலையில் இஷான் கிஷன் டாப் ஆர்டரில் தீவிரமாக விளையாடியதால்தான் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாட முடிந்தது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார். கடந்த 5 போட்டிகளில் 3ல் டக்-அவுட் ஆன விராட் கோலி நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி இல்லாத ஆட்டம்

நெருக்கடி இல்லாத ஆட்டம்

கடந்த போட்டிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் தனது ஆட்டத்தை நழுவவிட்ட கோலி, நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதாகவும், கடந்த போட்டிகளில் அவர் தனது ஆட்டத்தை ஆடவில்லை என்றும் ஆதர்டன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரிஷப் மற்றும் இஷான் சிறப்பாக ஆடியதையடுத்து கோலியும் நெருக்கடி இல்லாமல் தனது ஆட்டத்தை ஆடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, March 15, 2021, 19:07 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+