Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தாத்தாவுக்கு வயசு ஆகிடுச்சு”.. இஷான் கிஷன் கேர்ள்பிரண்ட்.. அம்மா ரியாக்ஷன்.. குடும்பத்தில் கலகம்

பாட்னா: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் இஷான் கிஷன். 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய அவரை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடி வருகிறது. ஆனால், மைதானத்திற்கு வெளியே அவரது திருமணம் மற்றும் அவரது "மாடல்" தோழி குறித்த விவகாரம் தற்போது குடும்பத்திற்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஷான் கிஷனின் தாத்தா கூறிய கருத்துக்கு, அவரது தாயார் மறுப்பு தெரிவித்துள்ளதே இந்த பரபரப்புக்குக் காரணம்.

தாத்தா சொன்னது என்ன?

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே, தனது பேரன் பிரபல மாடல் அழகியான அதிதி ஹுண்டியாவைக் காதலிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், "இஷான் கிஷன் யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறாரோ அவரை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வோம். அதிதி ஹுண்டியா இஷானின் தோழி. அவர் ஒரு மாடல். குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ அதை ஏற்றுக்கொள்வதுதான் பெரியவர்களின் கடமை" என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

Ishan Kishan Marriage Rumors Spark Family Feud Mother Denies Grandfather s Claims About Girlfriend Aditi Hundia

அம்மா கொடுத்த ரியாக்ஷன்

தாத்தாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இஷான் கிஷனின் தாயார் சுசித்ரா தேவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இது இஷான் கிஷன் திருமணத்தைப் பற்றிப் பேசும் நேரம் கிடையாது. அவர் இப்போது கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். திருமணத்தைப் பற்றிப் பேசும் அளவுக்கு அவருக்கு வயதாகிவிடவில்லை."

"தாத்தாவுக்குச் சற்று வயதாகிவிட்டது. வயதானவர்கள் எப்போதுமே கொஞ்சம் அதிக உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். சமூக வலைதளங்களில் வரும் செய்திகளைப் பார்த்துவிட்டு அவர் இப்படிப் பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் ஏதாவது ஒன்று வந்து கொண்டே தான் இருக்கும்" என்று கூறியுள்ளார். அதாவது இந்த செய்தியில் உண்மை இல்லை என்பது போல இஷான் கிஷன் தாயார் கூறி இருக்கிறார்.

யார் அந்த அதிதி?

இஷான் கிஷனும் மாடல் அழகி அதிதி ஹுண்டியாவும் காதலிப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதிதி ஹுண்டியா முன்னாள் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் ஆவார். ஐபிஎல் போட்டிகளின் போது இஷான் கிஷனுக்கு ஆதரவளிக்க அதிதி மைதானத்திற்கு வருவது வழக்கம். இருப்பினும், இருவரும் தங்கள் உறவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கவனச்சிதறல் வேண்டாம்

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், இந்த ஆட்ட நாயகன் விருது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் உரியது என்று கூறியிருந்தார். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி உலகக்கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்படி இஷான் கிஷன் கிரிக்கெட்டில் முழுக் கவனத்தையும் செலுத்தி வரும் வேளையில், அவரது தாத்தா மற்றும் அம்மா ஆகியோரின் மாறுபட்ட கருத்துகள் ரசிகர்களிடையே சுவாரஸ்யமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குடும்ப கலகம் ஒரு பக்கம் இருந்தாலும் இஷான் கிஷன் தற்போது டி20 உலகக்கோப்பையில் உச்சகட்ட ஃபார்மில் ஆடி வருகிறார். அதை தொடர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் உள்ளது.

Story first published: Wednesday, February 18, 2026, 10:24 [IST]
Other articles published on Feb 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+