“அசிங்கமா போச்சு குமாரு..” களத்தில் இஷான் கிஷான் செய்த சேட்டை.. இணையத்தை கலக்கும் வீடியோ!
லண்டன்: இங்கிலாந்து அணியுடனான தொடரில் இஷான் கிஷான் அசிங்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
இதனையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தை 110 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றிவிடும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய வீரர்கள் பயிற்சிகளுக்கு இடையே பொழுதுபோக்கு விஷயங்களையும் செய்து வருவார்கள். அந்தவகையில் சிறுவர்களை போன்று பச்சை குதிரை தாண்டும் போட்டியை போன்று ஆடியுள்ளனர். அதுவும் அங்கிருந்த ரசிகர்கள் முன்பு இந்த போட்டி நடைபெற்றது.
நிமர்ந்து நின்றிருந்த சக வீரரை இஷான் கிஷான் துணிச்சலுடன் தாண்ட முயன்றார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கவிழ்ந்து விழுந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி சிரித்து தள்ளினர். இதுகுறித்த வீடியோ இணைய


Click it and Unblock the Notifications