For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிவேக இரட்டை சதம் விளாசி இஷான் கிஷன் சாதனை.. 4வது இந்திய வீரர் என்ற பெருமை.. பல சாதனைகள் உடைப்பு

சிட்டங்காங் : வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், ஓயிட்வாஷை தவிர்க்கும் நோகத்தில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா களமிறங்கியது.

கடந்த 2 மாதமாக வாய்ப்பில்லாமல், முதல் முறையாக வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் களமிறங்கினார்.

சிதறிய பவுண்டரிகள்

சிதறிய பவுண்டரிகள்

ஷிகர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் தனது அதிரடியான பேட்டிங் மூலம் வங்கதேசத்துக்கு நெருக்கடி அளித்தார். முதலில் பொறுமையாக விளையாடிய இஷான் கிஷன், 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன் பிறகு இஷான் கிஷன் ரூத்ரதாண்டவம் ஆடினார். நீங்க பந்தை எப்படி போட்டாலும், அடிப்பேன் என்ற வகையில், வங்கதேச பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

150 ரன்கள்

150 ரன்கள்

இதனைத் தொடாந்து 85 பந்துகளில் தன்னுடைய முதல் சதத்தை இஷான் கிஷன் பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன், சிக்சர், பவுண்டிரிகளை விளாச, அடுத்த அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார்.

கோலியின் அறிவுரை

கோலியின் அறிவுரை

இதன் முலம் 103 பந்துகளில் இஷான் கிஷன் 153 ரன்களை விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். இதன் பிறகும் இஷான் கிஷன் போதும் என்று நிறுத்தி கொள்ளாமல் கிடைக்கும் பந்தை சிக்சர்களுக்கு விரட்டினார். மறுமுறும் இருந்த கோலியும், கிடைக்கும் வாய்ப்பை வீணடிக்காமல், இரட்டை சதம் விளாசு என்று கூறினார்.

அதிவேக இரட்டை சதம்

அதிவேக இரட்டை சதம்

தாம் படைக்க போகும் சாதனையை உணர்ந்த இஷான் கிஷன், 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் மற்றும் விளாசிய வீரர், இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார், சச்சின், சேவாக், ரோகித்துக்கு பிறகு 4வது இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என பெருமையையும் அவர் பெற்றார்.

சாதனைகள் முறியடிப்பு

சாதனைகள் முறியடிப்பு

வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் சாதனையும், அதிக சிக்சர் விளாசிய கங்குலியின் சாதனையையும் இஷான் கிஷன் முறியடித்தார். 131 பந்துகளில் 210 ரன்களை குவித்த நிலையில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். இதில் 24 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும்

Story first published: Saturday, December 10, 2022, 14:43 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Ishan kishan scored fastest double century in odi cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+