Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக சாதனை படைத்து 5 நாள் கூட ஆகல.. மீண்டும் சதம் விளாசி அசத்திய இஷான் கிஷன்.. பிண்ணிட்டாரு பா !

ராஞ்சி : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டை சதம் விளாசி இசான் கிஷன் சாதனை படைத்து ஐந்து நாட்கள் கூட இன்னும் ஆகவில்லை.

டெஸ்ட் தொடரில் இடம் பெறாத இஷான் கிஷன் தனது ஓய்வு நேரத்தில் கூட ரஞ்சிப் போட்டியில் விளையாட முடிவெடுத்தார்.

இந்த நிலையில் கேரளாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் விளையாடினார்.

 கேரளா அதிரடி

கேரளா அதிரடி

முதலில் பேட் செய்த கேரள அணி அதிரடியாக விளையாடி 475 ரன்கள் குவித்தது. அக்சய் சந்திரன் 150 ரண்களும், ஜோசப் 83 ரன்களும் விளாசினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 108 பந்துகளை பிடித்து 72 ரன்கள் அடித்தார். இதில் ஏழு சிக்ஸர்களும் , நான்கு பவுண்டர்களும் அடங்கும்.

பதிலடி

பதிலடி

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சு சாம்சன், ரஞ்சிப் போட்டிகள் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி பேட்டிங்கில் தடுமாறியது. 114 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்த நிலையில் களத்திற்கு இஷான் கிசன் வந்தார். வழக்கம் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார் .

132 ரன்கள்

132 ரன்கள்

முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்ட இஷான் கிஷன் பின்னர் பவுண்டர்களை விரட்டினார்.இதன் மூலம் 195 பந்துகளை பிடித்த இஷான் கிஷன், 132 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும். ரஞ்சி கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் அவர் அடித்த ஆறாவது சதம் இதுவாகும்.வங்கதேசத்துக்கு எதிராக சாதனை படைத்த 5 நாட்களுக்குள் மீண்டும் சதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

இந்த சதம் மூலம் இந்திய அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக இஷான் கிஷன் மாறிவிட்டார். ஏற்கனவே வாய்ப்புக்காக சஞ்சு சாம்சன் போட்டியில் உள்ள நிலையில் தற்போது அவருக்கு இஷான் கிஷனும் வில்லனாக மாறிவிட்டார்.டெஸ்ட் அணியில் ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார். இதனால் இஷான் கிஷனுக்கு ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 15, 2022, 22:31 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+