“யாருக்கிட்ட வச்சுக்கிற”.. இஷான் கிஷான் - சாம்சி இடையே நடந்த சண்டை.. மைதானத்தில் பரபரப்பு - வீடியோ!!
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க பவுலருக்கும் இந்திய வீரர் இஷான் கிஷானுக்கு களத்திலேயே காரசாரமான சண்டை நடந்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை குவித்தது.

அதிரடி ஓப்பனிங்
இந்திய அணிக்கு ஓப்பனிங் ஜோடி ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தனர். ருதுராஜ் கெயிக்வாட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுணையில் இஷான் கிஷான் 35 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார்.

திடீர் பிரச்சினை
இந்நிலையில் போட்டியின் போது இஷான் கிஷானுக்கு கசப்பான சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டத்தின் 9வது ஓவரில் சாம்சி வீசிய 4வது பந்தை இஷான் கிஷான் அட்டகாசமான சிக்ஸர் அடித்தார். இதனால் சாம்சி வருத்தமடைந்தார். இதற்கு அடுத்த பந்தையும் இஷான் மிக வேகமாக அடித்தார். ஃபுல் டாஸாக வந்த அந்த பந்து ஃபீல்டரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இஷானின் வாக்குவாதம்
இதனையடுத்து இஷான் கிஷானை சீண்டும் வகையில் சாம்சி ஏதோ கூறியது கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் கடுப்பான இஷான் கிஷான், உடனடியாக ஆக்ரோஷத்துடன் வாக்குவாதம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பேட்டிங்கில் பதிலடி
இந்த வாக்குவாதத்திற்கு தனது பேட்டாலும் இஷான் பதிலடி தந்தார். சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் வீசிய அடுத்த ஓவரில் 4, 6, 4 என அடுத்தடுத்து பறக்கவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அவர் 54 ரன்களை குவித்தார்.


Click it and Unblock the Notifications