Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டக் அவுட் வீரருக்கு அடித்த லக்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் சான்ஸ்.. ரோஹித் எடுத்த முடிவு

சென்னை : இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக இஷான் கிஷனை தொடர்ந்து ஆட வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்தப் போட்டியில் இந்தியா தன் முழு பலத்துடன் கூடிய அணியை களமிறக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆன இஷான் கிஷனை மீண்டும் அணியில் ஆட வைக்கும் முடிவில் உள்ளது இந்திய அணி.

Ishan Kishan to play as Opening batsmen for India vs Pakistan match

ஆஸ்திரேலியவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 199 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது. அந்தப் போட்டியில் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள்.

இஷான் கிஷன் டக் அவுட் ஆனது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பலரும் சுப்மன் கில் இல்லாததால் தான் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் சுப்மன் கில் அணிக்கு திரும்ப வேண்டும் என கூறி வருகின்றனர்.

ஆனால், சுப்மன் கில் இப்போதைக்கு அணிக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார். 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட சென்னை வந்த போதே, சுப்மன் கில்லுக்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது.

அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததை பின்னர் உறுதி செய்த பிசிசிஐ மருத்துவர்கள் குழு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. தற்போது அவர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத நிலையில், வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

அவர் குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஓய்வில் இருந்தால் தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு உடல் பலத்தை பெற முடியும். அந்த வகையில் அவரால் அடுத்து இந்தியா ஆட உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆட முடியாது.

Ishan Kishan to play as Opening batsmen for India vs Pakistan match

இந்த நிலையில் தான், இஷான் கிஷன் இந்திய அணியில் துவக்க வீரராக தொடர்ந்து ஆட உள்ளார். சுப்மன் கில் இல்லாததால் சிக்கலில் இருக்கும் ரோஹித் சர்மா, இஷான் கிஷனுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கே எல் ராகுல் மிடில் ஆர்டரில் அணிக்கு முக்கியமான வீரராக இருக்கிறார். அவர் இல்லாமல் போயிருந்தால் ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்கும். அந்தப் போட்டியில் அவர் மூன்று வீரர்கள் டக் அவுட் ஆன பின் களமிறங்கி, கோலியுடன் கூட்டணி அமைத்து 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இஷான் கிஷன், ராகுலை விடுத்து தற்போது அணியில் எந்த வீரரும் துவக்க வீரராக இறங்க சரியான ஆள் இல்லை. அதனால், இஷான் கிஷன் பாகிஸ்தான் போட்டி வரை அணியில் தொடர்ந்து துவக்க வீரராக ஆட வைக்க முடிவு செய்துள்ளார் ரோஹித் சர்மா.

Story first published: Tuesday, October 10, 2023, 13:37 [IST]
Other articles published on Oct 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+