Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புலியைப் பார்த்து சூடு போட முயன்ற குட்டிப் புலி.. வைரலாகும் இஷான் கிஷன் வீடியோ!

மும்பை : இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் ட்ராபியில் மும்பை வீரரான இஷான் கிஷன், தோனி போல ஸ்டம்பை பார்க்காமல் ரன் அவுட் செய்ய முயற்சி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் தனித்துவம் வாய்ந்த தோனி, பல சமயங்களில் ஸ்டம்பை பார்க்காமலேயே பந்தை அடித்து ரன் அவுட் செய்ய முயல்வார். சில சமயம் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

Ishan Kishan try to copy Dhoni in runout - watch this video

உலக அளவில் இது போல ரன் அவுட் முயற்சி செய்து வருபவர் தோனி தான். இப்போது வரும் இளம் வீரர்கள் சிலர் தோனி போல ரன் அவுட் செய்ய சில சமயம் முயற்சிக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

இந்தியா ரெட் மற்றும் இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையே ஆன துலீப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் விளையாடிய இஷான் கிஷனுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பு கிடைத்தது. அது எளிதான வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் தோனி போல ரன் அவுட் செய்ய முயன்றார்.

அந்த வீடியோவை வெளியிட்டுள்ள பிசிசிஐ, "இஷான் கிஷன், தோனி போல முயன்ற போது...." என குறிப்பிட்டுள்ளது.

இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-இல் ஆடி பெயர் பெற்றார். தற்போது முதல் தர போட்டிகளில் ஆடி வரும் அவர் 32 போட்டிகளில், 4 சதம், 11 அரைசதம் மற்றும் பேட்டிங் ஆவரேஜ் 41 வைத்துள்ளார். விக்கெட் கீப்பரான அவர் 58 கேட்ச் மற்றும் 9 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Story first published: Thursday, September 6, 2018, 16:45 [IST]
Other articles published on Sep 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+