Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷான் கிஷன் vs கேஎஸ் பரத்.. யார் அணியில் வேண்டும்.. டிராவிட் சொன்ன பதிலை பாருங்க !

அகமதாபாத் : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருவது பெரும் குறையாக பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்த பிறகு அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் ஒரு முறை கூட அரைசதம் அடிக்காமல் சோபிக்க தவறி வருகிறார்.

இதேபோன்று புஜாரா மூன்றாவது டெஸ்டில் அரைசதம் அடித்தாலும் தொடர்ந்து பெரிய ஸ்கோரை அடிக்க தவறி வருகிறார். விராட் கோலி கடந்த 15 இன்னிங்ஸ் ஆக ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

பெரிய மைனஸ்

பெரிய மைனஸ்

இந்த நிலையில் கீழ் வரிசை வீரர்களான அஸ்வின் 79 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் அடித்திருக்கிறார்கள். நடப்பு தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அக்சர் பட்டேல் தான் பெற்றிருக்கிறார் என்றால் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாட்டை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இல்லாதது பெரும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

வெறும் 14 சராசரி

வெறும் 14 சராசரி

பண்ட்க்கு பதில் களமிறங்கியுள்ள கே எஸ் பரத் 5 இன்னிங்ஸில் வெறும் 57 ரன்களை அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 14 ரன்கள் தான். இது இந்திய அணிக்கு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. பரத் பேட்டிங்கில் சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் கில்லி போல் செயல்படுகிறார். இந்த நிலையில் கே எஸ் பரத்தை நீக்கிவிட்டு இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிராவிட் பதில்

டிராவிட் பதில்

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட் நாங்கள் பரத்தின் பேட்டிங் குறித்து கவலைப்படவில்லை. நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதில் தான் அனைத்துமே இருக்கிறது. கடினமான சவால்கள் மற்றும் சூழ்நிலையில் அவர் எப்படி அணிக்கு பங்காற்றுகிறார் என்பதை தான் பார்க்க வேண்டும். கேஸ் பரத் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் அடித்தது முக்கியமானதாகும். டெல்லியில் கூட இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நன்றாக விளையாடி நேர்மறையான எண்ணத்துடன் இருந்து பந்துகளை எதிர்கொண்டார்.

கேஎஸ் பரத் vs இஷான் கிஷன்

கேஎஸ் பரத் vs இஷான் கிஷன்

இது போன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது அதிர்ஷ்டம் தேவைப்படும் .கேஸ் பரத்துக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்பது தான் உண்மை. கே எஸ் பரத் நன்றாகவே ஒரு பேட்ஸ்மேனாக உருவாகி கொண்டு வருகிறார். எனவே அதனை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதனால் பேட்டிங் செயல்பாடு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பதை தள்ளி வைக்க வேண்டும் என டிராவிட் கூறியுள்ளார். இதன் மூலம் கடைசி டெஸ்டில் கேஸ் பரத் தான் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

Story first published: Wednesday, March 8, 2023, 12:46 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+