Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு

அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு அவருக்கு ஆப்பாக அமைந்தது.

வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அவர்களுக்கு தொடர்நது வாய்ப்பு வழங்கி ஆதரவு வழங்குவது தான் ஹர்திக் பாண்டியாவின் ஸ்டைல்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் 50 ரன்களுக்கு மேல் கொடுத்தாலும், 2வது டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.

ஹர்திக் நம்பிக்கை

ஹர்திக் நம்பிக்கை

இதனை பயன்படுத்தி கொண்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையை காப்பாற்றினார். இதே போன்று வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய பிறகு, அவர் ஒரு முறை தான் 30 ரன்களை தாண்டினார். அதன் பிறகு ஒரு முறை கூட எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடைசி 14 இன்னிங்ஸ்

கடைசி 14 இன்னிங்ஸ்

இதே போன்று டி20 கிரிக்கெட்டில் கேஎல் ராகுலுக்கு பதில் இந்திய அணியில் தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்கினார். இதில் அவர் கடைசியாக விளையாடிய 14 டி20 இன்னிங்ஸ்களை தற்போது காணலாம். 27 (26), 15 (7), 26 (11). 3 (5). 8 (10).11 (13). 36 (31). 10 (11). 37 (29).2 (5).1 (2). 4 (5).19 (32). 1 (3). இதில் மொத்தமாகவே அவர் 200 ரன்களை தான் அடித்திருக்கிறார். இதில் சராசரி 14.28 ஸ்ட்ரைக்ரேட் வெறும் 105 தான்.

அதிருப்தி

அதிருப்தி

இப்படி மோசமாக செயல்பட்டாலும், மீண்டும் , ஹர்திக் இன்று அவருக்கு வாய்ப்பு வழங்கினார். இஷான் கிஷனோ 3 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் அதிருப்தி அடைந்த இந்திய அணி நிர்வாகம், அவரை அணியை விட்டு நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்வி ஷா

பிரித்வி ஷா

வாய்ப்புக்காக ஏற்கனவே காத்திருக்கும் பிரித்வி ஷாவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கொடுத்திருந்தாலும் , அவருடைய திறமைக்கு அங்கீகாரம் தரும் வகையில் அமைந்திருக்கும். ஆனால், இஷான் கிஷனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி தற்போது தலைக்குனியும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா தள்ளப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, February 1, 2023, 20:21 [IST]
Other articles published on Feb 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+