Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபிலையே காலி செய்த பலே பவுலர்…! இதுதான் சூப்பர்.. ! வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கல்

Recommended Video

Watch Video : Ishant sharma beats kapil dev record

கிங்ஸ்டன்: ஆசிய கண்டத்துக்கு வெளியே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையை அடித்து நொறுக்கி இருக்கிறார் இஷாந்த் சர்மா.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்சில் மேலும ஒரு விக்கெட்டை காலி செய்தார்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்து வருகிறது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, விஹாரியின் அபார சதம் மற்றும் கோலி, அகர்வால், இஷாந்த் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் முதல் இன்னிங்சில் 416 ரன்களை குவித்தது.

விக். சரிவு

விக். சரிவு

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ், இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறி கொடுத்தது. 3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 117 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.

467 ரன்கள் முன்னிலை

467 ரன்கள் முன்னிலை

299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்றது.

சாதனை முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா, 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், அதில் ஒரு விக்கெட்டை அவரே வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ஹாமில்டனின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, கபில் தேவின் டெஸ்ட் சாதனை ஒன்றை முறியடித்து முதலிடத்தை பிடித்தார்.

156வது விக்கெட்

156வது விக்கெட்

ஹாமில்டனின் விக்கெட், ஆசியாவிற்கு வெளியே இஷாந்த் சர்மா வீழ்த்திய 156வது விக்கெட் ஆகும், இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் (அவர் வீழ்த்தியது 155 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்துள்ளார்.

Story first published: Monday, September 2, 2019, 20:41 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+