டிசம்பர் 9ல் இஷாந்த் ஷர்மாவுக்கு டும், டும், டும்! கூடைப்பந்தாட்ட வீராங்கனையை மணக்கிறார்
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கும், கூடைப்பந்து வீராங்கனை, பிரதிமா சிங்கிற்கும், டிசம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
கடந்த ஜூன் 19ம் தேதி இவ்விருவருக்கும் நடுவே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், டிசம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதிமா சிங், வாரணாசியை சேர்ந்தவர். ஆசிய கோப்பை உட்பட, பல்வேறு சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றவர். இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் இருந்தவர் பிரதிமா சிங்.
'சிங் சிஸ்டர்ஸ்' என்ற பெயரை பெற்றவர்கள் பிரதிமா சிங் சகோதரிகள். ஏனெனில் பிரதிமாவுக்கு உடன்பிறந்த அக்காள்கள் எண்ணிக்கை 5. அனைத்து சகோதரிகளுமே கூடைப்பந்தாட்ட வீராங்கனைகள் என்பது சிறப்பு.
இஷாந்த் ஷர்மா மற்றும் பிரதிமா இருவரும் தஷ்வமேத் காட் பகுதியில் நடந்த கங்கை ஆரத்தி நிகழ்வில் நேற்று பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications