Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனதை காயப்படுத்தும் படி பேசுவார்.. நம்மை கோவப்படுத்துவார்.. ரவி சாஸ்திரி குறித்து இஷாந்த் கருத்து

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா ரவி சாஸ்திரியின் பயிற்சி முறை குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.

இந்திய வேகபந்துவீச்சாளர்களில் முதல் முறையாக 100 டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றவர் இஷாந்த் சர்மா.

ஒரு காலத்தில் இஷாந்த் ஷர்மா இல்லை என்றால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற இக்கட்டான நிலை இருந்தது.

நல்ல குணம்

நல்ல குணம்

தற்போது பல இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதாலும் இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டு வருவதாலும் அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் இஷாந்த் சர்மா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்கும் போது அது என்னுடைய வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அவருடைய நல்ல குணமே நம்மிடம் என்ன நல்ல விஷயம் இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசுவார்.

வெளி கொண்டு வருவார்

வெளி கொண்டு வருவார்

ஏதேனும் ஒரு போட்டியில் நான் மோசமாக செயல்பட்டாலும் கூட அவர் நமக்கு ஆதரவு கொடுப்பார். எனினும் அவருடைய மிகப்பெரிய பலமே ஒரு வீரரிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை எப்படி வெளி கொண்டு வர வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். ஒரு வீரனை 100% சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்றால் அவரை கோபப்படுத்த வேண்டும் என்பது ரவி சாஸ்திரியின் கோட்பாடு.

நம்மிடம் பேசும் போது நமது மனதை காயப்படுத்தும் வகையிலும் நம்மை கோபப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

 உணர்ச்சிகரமாக பேசுவார்

உணர்ச்சிகரமாக பேசுவார்

இதன் மூலம் வீரர்கள் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள். ஒவ்வொரு வீரரும் என்ன கேட்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் ரவி சாஸ்திரி உணர்ச்சிகரமாக பேசுவார். இப்படித்தான் அவர் பல்வேறு வீரர்களை கையாண்டார். எனினும் போட்டி முடிந்த பிறகு அவர் வித்தியாசமான மனிதராக மாறிவிடுவார்.

அறிவுரை

அறிவுரை

எனக்கு மோசமான போட்டி அமைந்த போதெல்லாம் அதைப் பற்றி மறந்துவிடு. அடுத்த போட்டி குறித்து கவனம் செலுத்து என்று அறிவுரை வழங்குவார் என்று இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார். தற்போது 34 வயதான இஷாந்த் சர்மா 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும்,80 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்களையும் 14 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Monday, February 27, 2023, 16:23 [IST]
Other articles published on Feb 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+