இப்படியே விட்டால்.. ஓரம்கட்டிவிடுவார்கள்.. புலம்பும் இந்திய வீரர்.. இரவு முழுக்க நெட் பயிற்சி!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த பவுலர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் என்கிறார்கள்.
இந்தியா இங்கிலாந்து இடையே நாளை தொடங்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளும் மோதும் இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடரை போல விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வெல்லும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.

காயம்
இந்த நிலையில் இந்திய அணிக்கு காயத்திற்கு பின் இஷாந்த் சர்மா திரும்பி வந்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக இஷாந்த் சர்மா இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல் தொடரிலும் இவர் காயம் காரணமாக ஆடவில்லை.

வலைப்பயிற்சி
தற்போது இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் இஷாந்த் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கோலி எதிர்பார்த்த அளவிற்கு இவரின் பவுலிங் அத்தனை சிறப்பாக இல்லை என்கிறார்கள்.

சிறப்பு
இதனால் இந்திய அணியில் நாளை இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இஷாந்த் சர்மாவிற்கு பதில் சிராஜ் அணியில் எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் இஷாந்த் சர்மா தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

போய்விடும்
இந்த தொடரில் இடம்பெறவில்லை என்றால் மொத்தமாக ஓரம்கட்டிவிடுவார்கள். அப்பறம் எதிர்காலமே காலியாகிடும். இதில் எப்படியாவது ஆட வேண்டும். எப்படியாவது அனுபவத்தை நிரூபிக்க வேண்டும்.

நிரூபணம்
அணியில் மீண்டும் இணைய ஏதாவது செய்ய வேண்டும் என்று இஷாந்த் சர்மா உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் வலைப்பயிற்சியில் இஷாந்த் சர்மா கூடுதல் நேரம் எடுத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் அணியில் இணைவாரா என்பது இன்று மாலைதான் முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications