Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டிக்கு ஓசி டிக்கெட் கேட்ட ரசிகர்.. கலாய்த்து அனுப்பிய இஷாந்த் சர்மா மனைவி!

டெல்லி : ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இலவச ஐபிஎல் டிக்கெட்களுக்காக பகீரத முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.

அப்படி ஒரு ரசிகர் இஷாந்த் சர்மாவின் மனைவியிடம் இலவச டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு இஷாந்த் சர்மா மனைவி பிரதிமா செம பதில் கூறி கேலி செய்து அனுப்பி உள்ளார்.

டிக்கெட் கிடைக்குமா?

டிக்கெட் கிடைக்குமா?

இஷாந்த் சர்மாவின் மனைவி பிரதிமாவிடம், "ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்குமா? என இணையத்தில் கேட்டுள்ளார் ஒரு ரசிகர். இலவச டிக்கெட் என இந்த ரசிகர் கூறாவிட்டாலும், அதை தான் அவர் எதிர்பார்த்து கேட்டுள்ளார்.

இங்கே கிடைக்கும்

பிரதிமா அவருக்கு, "பேடிஎம்-மில் கிடைக்கும்" என பதில் அளித்து அவரை கலாய்த்து அனுபியுள்ளார். இந்த தகவல் பரிமாற்றத்தை படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரதிமா.

இஷாந்த் சர்மா - 1 கோடி

இஷாந்த் சர்மா - 1 கோடி

இஷாந்த் சர்மா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. 2019 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தான் அவர் 1 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

தேர்வாக காரணம் இது தான்

தேர்வாக காரணம் இது தான்

இஷாந்த் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். அவரை ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தேர்வு செய்வதே இல்லை. அதே போல, ஐபிஎல் தொடரிலும் சென்ற ஆண்டு வாய்ப்பு பெறாத நிலையில், இந்த ஆண்டு அவர் தேர்வாக காரணம் உலகக்கோப்பை தான்.

சுழற்சி முறை ஓய்வு

சுழற்சி முறை ஓய்வு

2019 உலகக்கோப்பை தொடர் மே மாதம் துவங்க உள்ளதால், இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், டெஸ்ட் வீரரான இஷாந்த் சர்மா டெல்லி அணியில் அனைத்து போட்டிகளையும் ஆட முடியும்.

ஒருநாள் அணியில் இஷாந்த்?

ஒருநாள் அணியில் இஷாந்த்?

இஷாந்த் சர்மா ஐபிஎல் தொடரில் நன்றாக பந்து வீசி அதிக விக்கெட்கள் வீழ்த்தினால் அவர் இந்திய ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்ப சிறு வாய்ப்பு உள்ளது. ஆனால், நிச்சயம் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாவது கடினமே!

Story first published: Wednesday, February 20, 2019, 18:13 [IST]
Other articles published on Feb 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+