Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி.. பயிற்சி... பயிற்சியே உயிர்மூச்சு... டிராவிட் தலைமையில் பிட்னஸ் பயிற்சி

பெங்களூரு : காயம் காரணமாக கடந்த தொடர்களிலிருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தன்னுடைய பிட்னசை நிரூபிக்க தற்போது என்சிஏவில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் முதலில் விளையாடப்படும் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் பௌலிங் ஆர்டரை பலப்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியமானவராக இஷாந்த் சர்மா உள்ள நிலையில், அவர் ராகுல் டிராவிட் தலைமையில் தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நெருக்கடியில் இஷாந்த்

நெருக்கடியில் இஷாந்த்

கடந்த ரஞ்சி கோப்பை தொடரின்போது காயம் பட்ட இஷாந்த் சர்மா தொடர்ந்து நியூசிலாந்து தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் முழுமையாக பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு இடையிலேயே திரும்பினார். இந்நிலையில் இந்த தொடரிலும் காயம் காரணமாக அவரது பெயர் இடம்பெறாமல் உள்ளது.

பௌலிங்கை பலப்படுத்தும் திட்டம்

பௌலிங்கை பலப்படுத்தும் திட்டம்

தன்னுடைய பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். இதனால் அணியின் பௌலிங் ஆர்டரை பலப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

மாம்ப்ரேவிடம் பயிற்சி

மாம்ப்ரேவிடம் பயிற்சி

இந்நிலையில் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட்டின் தலைமையின்கீழ் இஷாந்த் சர்மா தன்னுடைய பிட்னசை நிரூபிக்க தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்டர் -19 பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேவிடம் அவர் தொடர்ந்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் உறுதி

ராகுல் உறுதி

இதனிடையே, மாம்ப்ரேவுடன் பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்வதன்மூலம், டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் இஷாந்த் பிட்னசில் வெகு சிறப்பாக தேறுவார் என்று ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய தொடரில் அவர் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, November 16, 2020, 23:50 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+