Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் இஷாந்த் சர்மா முடி வெட்ட வேண்டும்.. மாஜி தெ. ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் அட்வைஸ்

மும்பை: இஷாந்த் சர்மாவின் இன்றைய நிலைக்கு அவர்தான் பொறுப்பாவார். அவர் முதலில் பல நல்ல பழக்கங்களை தன்னுள் கொண்டு வர வேண்டும். முதலில் தலைமுடியை சீரமைக்க வேண்டும். அவரது தலைமுடியால் அணிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் பானி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

அவரைப் பார்த்தால் எனக்கு ஸ்போர்ட்ஸ்மேன் போலவே தெரியவில்லை. அவரது ஹேர்ஸ்டைல் மிக மோசமாக உள்ளது. கெட்டப் பையன் போன்ற தோற்றத்தையே அது தருகிறது என்றும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இமேஜ்தான் முதலில் அவருக்குப் பெரும் பிரச்சினை. அதை அவர் சரி செய்தாக வேண்டும். அவரிடம் நல்ல கிரிக்கெட் உள்ளது. ஆனால் கெட்ட பெயர் அதை ஓவர் டேக் செய்து விடுகிறது என்றும் வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவில்லியர்ஸ் மேலும் கூறியுள்ளதாவது:

போட்டியை அவர் உணர வேண்டும்

போட்டியை அவர் உணர வேண்டும்

இந்திய அணியில் திறமையாளர்கள் பலர் உள்ளனர். கடும் போட்டி நிலவுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மா தனது இமேஜை மாற்றியாக வேண்டியது அவசியமாகும்.

இலங்கை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது

இலங்கை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது

இலங்கை டூரின்போது இஷாந்த் நடந்து கொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது. அவரது நிலைக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அவரது செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்க முடியாது. அவர் செய்தது தவறு.

நன்றாக பந்து வீசினார்

நன்றாக பந்து வீசினார்

ஆனால் இலங்கை தொடரில் இஷாந்த் சர்மா நன்றாகவே பந்து வீசினார். அவரது குணம்தான் மாற வேண்டியுள்ளது. அது அணிக்கும் கூட நல்லது என்பதை அவர் உணர வேண்டும்.

பாடம் கற்றிருப்பார் என நம்பலாம்

பாடம் கற்றிருப்பார் என நம்பலாம்

பந்து வீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களுக்கு கோபமே எதிரியாகும். அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டும். நடந்த சம்பவத்திலிருந்து இஷாந்த் சர்மா பாடம் கற்றிருப்பார் என நம்புகிறேன் என்றார் அவர்.

தென் ஆப்பிரிக்கா வருகிறது

தென் ஆப்பிரிக்கா வருகிறது

தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வரவுள்ள நிலையில் இஷாந்த் சர்மா குறித்து இப்படிக் கருத்துத் தெரிவித்துள்ளார் பானி டிவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 27, 2015, 14:06 [IST]
Other articles published on Sep 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+