இஷாந்த் சர்மா, வினய் குமார் 'டிராப்'.... தவல் வருக வருக....!!
டெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இஷாந்த் சர்மா,வினய் குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மும்பையின் தவல் குல்கர்னி புதிய வீரரராக அறிமுகமாகிறார். மோஹித் சர்மாவுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.
சந்தீப் பாட்டில் தலைமையிலான தேர்வுக் குழு இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

போட்டிகள்
இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளன. இதற்கான அணியை இந்திய தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இஷாந்த், வினய் குமார் நீக்கம்
இதில் இஷாந்த் சர்மா,வினய்குமார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில், தவல் குல்கர்னி, மோஹித் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தவல் புதுமுகம் ஆவார்.

ரொம்ப மோசம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இஷாந்த்தும் வினய் குமாரும் ரொம்ப மோசமாக பந்து வீசியதால் இடத்தை இழந்துள்ளனர்.

ஷமி, ஜடேஜா
அதேபோல முகம்மது ஷமி அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜாவும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

அட..யுவராஜுக்கும் இடம்
அதேபோல யுவராஜ் சிங்கும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

போட்டிகள் விவரம்
முதல் போட்டி நவம்பர் 21ம் தேதி கொச்சியிலும், 2வது போட்டி 24ம் தேதி விசாகப்பட்டனத்திலும், 3வது போட்டி 27ம் தேதி கான்பூரிலும் நடைபெறும்.

அணி விவரம்
கேப்டன் டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ் குமார், முகம்மது ஷமி, அம்பட்டி ராயுடு, அமித் மிஸ்ரா, ஜெயத்வே உனத்கத், தவல் குல்கர்னி, மோஹித் சர்மா.


Click it and Unblock the Notifications