For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோவாவிடம் அவமானப்பட்ட மும்பை சிட்டி.. ஐஎஸ்எல் லீகில் அடுத்து டெல்லியிடம் தப்பிக்குமா?

மும்பை : மும்பை சிட்டி அணி எஃப்சி கோவா அணிக்கு எதிரான தோல்வியை கண்டிப்பாக மறந்துவிட வேண்டும். கடந்த வாரம் நடந்த அந்த போட்டியில் 0 - 5 என்ற கோல் கணக்கில் மும்பை அணி படுதோல்வி அடைந்தனர்.

அந்த அணியினர் தங்களைத் தாங்களே அந்தத் தோல்வியில் இருந்து மீட்டெடுத்து, நாளை மும்பை அரினா மைதானத்தில் டெல்லி டைனமோஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கேஸ்டா தெரிவித்துள்ளார்.

ISL 2018 - Mumbai need a victory against Delhi Dynamos to forget Goa loss

கோவா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியினர் தங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினர். ஆனால் அந்த வீரர்கள் அவர்களின் இலக்கை அடைய முடியாதவர்களாக இருந்தனர். மேலும் அவர்களின் முகம் ஒரு வலிமிகுந்த தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா கூறுகையில், கோவா அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் முதல் பாதியில் வீரர்கள் மிக நன்றாக ஆடினர். ஆனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதல் 20 நிமிடங்களில் மும்பை அணியின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. பின்னர் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டோம். இது எங்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்தது.

நாங்கள் 5 -0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததால் 15 நிமிடங்கள் இருக்கும்போதே ஆட்டம் எப்போது முடியும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டோம் என்றார். அணி வீரர்களும் ஓடிக்கொண்டிருதார்களேயொழிய ஆட்டத்தில் கவனம் செலுத்தவில்லை. அதனால் நாங்கள் மறந்துவிட்டோம். இந்த போர்ச்சுக்கீசிய பயிற்சியாளர் தொடக்கத்தில் இருந்தே போராட வேண்டும் என்கிறார்.

முதலில் நாம் நமது பணியை மதிக்க வேண்டும்...பின்னர் வேலையை மதிக்க வேண்டும்...மூன்றாவதாக ரசிகர்களை மதிக்க வேண்டும் இதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அந்த 15-20 நிமிடங்களில் என்ன நடந்தது, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டதால் நான் வெட்கப்படுகிறேன். ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக, என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிறார் கோஸ்டா.

கேப்டன் லூசியன் கோயியன் தான் இந்த ஆட்டத்துக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். விளையாடும் போது என்னனென்ன நுணுக்கங்கள் உள்ளன போன்றவற்றை உணர்ந்து ஆடியிருக்க வேண்டும், அதே நேரத்தில் கோவாவுக்கு எதிராக அந்த ஆட்டத்தில் காயமடைந்த கோல் கீப்பர் அமீர்ந்தர் சிங் இல்லாமல் அவர்கள் போராடி இருக்க வேண்டும் என்று கோஸ்டா தெரிவித்தார்.

டெல்லி டைனமோஸ் அணி மும்பைக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியுற்றது. அந்த இழப்பு மும்பை சிட்டிக்கு எதிரானது அல்ல. அது கோவாவுக்கு எதிரானது. மும்பை அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதை அந்த அணி கோலாக மாற்ற தவறிவிட்டது. ஆனால் அந்த தோல்விகள் நாளை நடைபெறவுள்ள போட்டியை பாதிக்காது என்கிறார் உதவி பயிற்சியாளர் மிர்துள் பானர்ஜி.

இது குறித்து டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் மிர்துள் பானர்ஜி கூறும்போது , நாங்கள் மிகவும் நன்றாக விளையாடுகிறோம். கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.

ஆனால் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாளை நாங்கள் அந்தப் பணியில் சிறப்பாக ஈடுபடுவோம். மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குள் நாங்கள் எங்கள் அணியில் உள்ள குறைகள் அனைத்தையும் நீக்கி வெற்றிக்கு தயாராக உள்ளோம் என்கிறார்

Story first published: Friday, October 26, 2018, 18:59 [IST]
Other articles published on Oct 26, 2018
English summary
ISL 2018 - Mumbai need a victory against Delhi Dabang to forget Goa loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+