Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கோல் கூட அடிக்காத சென்னையின் எஃப்சி.. புரட்டிப் போட்ட பெங்களூரு எஃப்சி அணி!!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 20 ஆம் நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ISL 2019-20 : Bengaluru FC vs Chennaiyin FC match no.20 report

ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பர்த்தலு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதே போல் ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியில் மாற்றங்கள் செய்ப்பட்டன. 61 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கணேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 75 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 84 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் செம்போய் ஒரு கோல் அடித்து அசத்தினார். 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ரஃபேல் வெளியேற்றப்பட்ட லிண்டோ களம் இறக்கப்பட்டார். அதே நேரத்தில் சென்னை அணியின் கைத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, November 11, 2019, 14:52 [IST]
Other articles published on Nov 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+