For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிக கோல் அடிக்கத் துடிக்கும் ஏடிகே அணி.. முதல் வெற்றியை பெறுமா சென்னை?

கொல்கத்தா : சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் புதன்கிழமை அன்று சென்னையின் எஃப்சிக்கு எதிரான மோதலுக்கு ஏடிகே அணி தயாராக உள்ளது.

இந்த சீசனில் முன்னாள் சாம்பியன்களான ஏடிகே அணியினர் ஒரு தவறான தொடக்கத்தை உருவாக்கினார். ஆனால், 5-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தினர்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview

அதில் ஏடிகே அணியினர் 90 நிமிடங்களிலும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அதே நேரத்தில் தற்போது ஏடிகே அணியின் மனநிலை சிறப்பாக உள்ளது. இதையடுத்து சென்னை அணியை வென்றெடுக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த போட்டியில் மூன்று புள்ளிகளைப் பெற வேண்டும் என்று நினைத்தோம். எங்களைப் பொறுத்தவரை, அணியின் செயல்திறன் மிக முக்கியமானது. அணியின் செயல்திறனில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தலைமை பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் கூறினார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview

அவர்களின் எதிரிகளான சென்னையின் எஃப்சிக்கு சிறந்த தொடக்கங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் இரண்டு ஆட்டங்களில் இருந்து ஒரு புள்ளி மட்டுமே பெற்றனர். இன்னும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும், சென்னை அணியை அவ்வளவு சுலபமாக எண்ணிவிட முடியாது என்கிறார் ஹபாஸ்.

"முதல் இரண்டு போட்டிகளில் சென்னை அணி கோல் எதுவும் அடிக்கவில்லை, ஆனால் அடுத்த போட்டியில் அவர்கள் கோல் அடிக்க முடியும். அதே நேரத்தில் புள்ளிவிவரம் முக்கியமல்ல. முக்கியமான விஷயம் 90 நிமிடங்களில் செயல்திறன் என்பதுதான். நாங்கள் அந்த மாதிரியான மனநிலையுடன் சென்னைக்கு செல்ல வேண்டும்" என்றார் ஸ்பெயினார்ட்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview

ஏடிகே அணியின் பயிற்சியாளர் ஹபாஸைப் பொறுத்தவரை, அவரது அணிக்கு அவர்களின் வாய்ப்புகளைத் தள்ளி வைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சீசன் துவக்கத்தில் கேரளா பிளாஸ்டர்ஸுக்கு எதிராக சில வாய்ப்புகளை அவர்கள் தவறவிட்டிருந்தாலும் , மைக்கேல் சூசைராஜ் மற்றும் பிரபீர் தாஸ் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட ராய் கிருஷ்ணா, டேவிட் வில்லியம்ஸ் மற்றும் எடு கார்சியா போன்றவர்கள் ஹைதராபாத்திற்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview

"ஒரு நாள் நீங்கள் பல வாய்ப்புகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் கோல் அடிக்க முடியாது, மற்றொரு நாள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, நீங்கள் கோல் அடித்திருக்கலாம். நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் முடிவில் வேலை செய்கிறோம், என்னைப் பொறுத்தவரை, இது ஒரு பிரச்சினை அல்ல. அணி இப்போது வரை பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, அது மிகவும் முக்கியமானது" என்று ஹபாஸ் கூறினார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview

62 வயதான பயிற்சியாளர் தனது அணியின் உடற்பயிற்சி மற்றும் பிராக்டிசில் மகிழ்ச்சியாக உள்ளார். முக்கிய டஃபெண்டரான ஜான் ஜான்சனும் அந்த அணியில் இடம் பெற்று மீண்டும் போட்டியிடுகிறார்,

"உடல் ரீதியாக நாங்கள் 75% அல்லது 80% தயாராக இருக்கிறோம். எங்களுக்கு காயங்கள் இல்லை, ஏனென்றால் எங்களுக்கு முந்தைய சீசன் அருமையாக இருந்தது. மேலும் வீரர்கள் தங்கள் நோக்கங்களை அடைய பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்." என்கிறார் ஹபாஸ்.

Story first published: Monday, October 28, 2019, 20:32 [IST]
Other articles published on Oct 28, 2019
English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match 11 Preview. Can CFC get their first victory in this season?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+