Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரமாரியாக கோல் அடித்து.. வெளுத்து வாங்கிய கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஹைதராபாத் அணியை பந்தாடி அபார வெற்றி!

கொச்சி : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 52 ஆம் நாள் ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் எஃப்சி அணி முதல் பாதி ஆட்டத்தை வலது புறமிருந்து தொடங்கியது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Hyderabad FC match 52 report

ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் போபோ ஒரு கோல் அடித்து அசத்தினார். 29 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 33 நிமிடத்தில் கேரளா அணியின் ஒபிச்சி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 39 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் டிராபாரோவ் ஒரு கோல் அடித்தார். 44 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்கோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Hyderabad FC match 52 report

பின்னர் 45 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்ஸி ஒரு அற்புதமான ஒரு கோல் அடித்தார். அதே 45 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இதில் கேரளா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 59 ஆவது நிமிடத்தில் கேரளாவின் ஜுவர்லூனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே 59 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சேத்தியசென் ஒரு கோல் அடித்து அசத்தினார். 62 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஹால்டருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Kerala Blasters FC vs Hyderabad FC match 52 report

66 மற்றும் 71 ஆவது நிமிடங்களில் ஹைதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து 75 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஒபிச்சி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

82 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 87 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சாகலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 89 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Monday, January 6, 2020, 15:23 [IST]
Other articles published on Jan 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+