Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019 : டெல்லி மற்றும் கோவா அணிகள் கடும் போட்டி.. ஆனா ஒரு கோல் கூட போடலையே!

டெல்லி : டெல்லியில் பிப்ரவரி 4 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் டெல்லி மற்றும் கோவா அணிகள் இடையேயான ஆட்டம் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 69 ஆவது கால்பந்து போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் டெல்லி மைனமோஸ் எஃப்சி அணிக்கும் எஃப்சி கோவா அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது.

ISL 2019 - Goa FC vs Delhi Dynamos FC match result

டாஸ் வென்ற டெல்லி அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் அபாரமான விளையாடின. ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு ஒரு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதனை தவறவிட்டது.

இரண்டு அணிகளுமே எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என முயற்சி செய்தன. ஆனாலும் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது.

ISL 2019 - Goa FC vs Delhi Dynamos FC match result

அந்த ஒரு நிமிடத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதைடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் டெல்லி மற்றும் கோவா அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆம் பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் கிரப்சி மாற்றப்பட்டு யுலிசஸ் களம் இறக்கப்பட்டார். இதே போல் அந்த அணியின் டேனியல் வெளியேற்றப்பட்டு வினித் ராய் களம் இறங்கினார்.

ISL 2019 - Goa FC vs Delhi Dynamos FC match result

பின்னர் அதே 46 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஹியுகோ வெளியேற்றப்பட்டு எடு பேடியா களம் இறங்கினார். இதையடுத்து இரு அணிகளுமே மிகச் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 59 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.

ஆட்டத்தின் 77 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 78 மற்றும் 84 ஆவது நிமிடங்களில் கோவா அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019 - Goa FC vs Delhi Dynamos FC match result

இதையடுத்து கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த மூன்று நிமிடத்திலும் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் கோவா அணிகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Story first published: Tuesday, February 5, 2019, 10:54 [IST]
Other articles published on Feb 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+