அடி வாங்கனப்போ 6 பீர் குடிச்ச மாதிரி இருந்தது.. 1 நிமிஷம் செத்தவங்க கண் முன்னாடி வந்து போனாங்க..!
Recommended Video
லண்டன்: ஆர்ச்சர் பந்தில் அடி வாங்கிய போது செத்து போனவங்க எல்லாம் கண் முன்னாடி வந்தாங்க, 6 பீர் குடித்த மாதிரி தலை சுற்றலாக இருந்தது என்று ஆஸி. ஸ்டார் வீரர் ஸ்மித் கலகலப்பூட்டினார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி. தற்போது இந்த தொடர் 1-1 என்ற சம நிலையில் இருக்கிறது.
2வது டெஸ்டில் ஆர்ச்சரின் அட்டாக் பவுலிங்கில், அடி வாங்கிய ஸ்டார் வீரர் ஸ்மித் மருத்துவமனை செல்ல வேண்டியதாயிற்று. கழுத்தில் வலி, தலைசுற்றல் என அவஸ்தைப்பட்டு கண்ணீர்விட்டார். ஒரு கட்டத்தில் தமக்கு என்ன நடந்தது என்ன என்பதை அவரால் உணர முடியாமல் இருந்தது.

4வது போட்டி
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது, 4வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். அது பற்றி ஸ்மித் கூறியதாவது: ஆர்ச்சர் வீசிய அந்த ஒரு பாலில் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்ததும் எனக்கு ஒரு நிமிடம் பில் ஹுயுக்ஸ் தான் முதலில் ஞாபகத்துக்கு வந்தார் (அவரும் இதேபோன்று கழுத்தில் இதே பகுதியில் அடிபட்டு உயிர் இழந்தவர்).

மோசமான இரவு
எனவே அவர் ஞாபகம் ஒரு நிமிடம் வந்து சென்றது. பந்து தாக்கியதும் மனநிலை வேறு விதத்தில் இருந்தது. அதன் பிறகு சுமாராகி வெளியேறினாலும் அன்று இரவு எனக்கு மிக மோசமான இரவாக அமைந்தது.

6 பீர் ஞாபகம்
6 பியர் குடித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று அவ்வளவு கடினமாக இருந்தது என்று மருத்துவக்குழுவிடம் கூறினேன். அந்த நினைவுகளை மறக்க எனக்கு சிறிது நாட்கள் ஆனது.

நன்றாக விளையாடுவேன்
தற்போது, 4வது கிரிக்கெட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறேன். கண்டிப்பாக 4வது டெஸ்டில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications