For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட கம்பேர் செஞ்சா நல்லாதான் இருக்கு.. ஆனா வேணாமே ப்ளீஸ்... பந்த் வெளிப்படை

டெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ளார் ரிஷப் பந்த்.

அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் எப்போதும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் கம்பேர் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சிறப்பாக இருந்தாலும் தான் தன்னுடைய சொந்த சாதனைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் பந்த் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ரிஷப் பந்த்

சிறப்பான ரிஷப் பந்த்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார் இளம் வீரர் ரிஷப் பந்த்.

ரிஷப் அபாரம்

ரிஷப் அபாரம்

டெஸ்ட் தொடரில் இவரது செயல்பாடு மிகவும் சிறப்பான வகையில் காணப்பட்டது. இறுதி மற்றும் 4வது போட்டியில் 89 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை சிறப்பாக வழிநடத்தினார் பந்த். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறப்பான உணர்வு

சிறப்பான உணர்வு

ரிஷப் பந்த்தின் விக்கெட் கீப்பிங் மற்றம் பேட்டிங்கை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் பல்வேறு தரப்பினரும் வழக்கமாக ஒப்பிடுவார்கள். அவர் சொதப்பும் போதெல்லாம் இதில் மாற்றுக் கருத்துக்களையும் வெளியிடுவது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனியுடன் ஒப்பிடுவது சிறப்பான உணர்வை அளிப்பதாகவும் ஆனால் இத்தகைய ஒப்பீடுகள் தேவையில்லை என்றும் பந்த் கூறியுள்ளார்.

ஒப்பிடுவது சரியல்ல

ஒப்பிடுவது சரியல்ல

இந்திய கிரிக்கெட்டில் தான் தன்னுடைய சொந்த சாதனைகளை மேற்கொள்ளவே விரும்புவதாகவும் அதையொட்டியே தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தோனி போன்ற ஒரு ஜாம்பவானுடன் இளம் வீரரான தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 21, 2021, 11:56 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
It's not good that you compare a legend with a youngster -Pant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+