Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிகப்பெரிய ஐபிஎல் இது... மக்கள்கிட்ட இயல்புநிலைய இது உருவாக்கும்.. ராபின் உத்தப்பா

துபாய் : இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ராபின் உத்தப்பா. போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

மற்ற சீசன்களை போலல்லாமல் ஐபிஎல்லின் இந்த சீசன் மிகவும் சிறப்பாக அமையும் என்றும் கொரோனாவால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்துள்ள நிலையில் மனதளவில் இயல்புநிலையை மீட்டுத்தரும் என்றும் உத்தப்பா கூறியுள்ளார்.

ஐபிஎல்லின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் பேசிய உத்தப்பா, மீண்டும் போட்டிகளில் விளையாடுவது மிகவும் சந்தோஷத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ஐபிஎல்

சிறப்பான ஐபிஎல்

ஐபிஎல் 2020 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் அதற்கென தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மற்ற சீசன்களை போலல்லாமல் இந்த சீசன் மிகவும் சிறப்பாக அமையும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோப்பையை கைப்பற்ற ஆவல்

கோப்பையை கைப்பற்ற ஆவல்

இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களும் இந்த சீசனை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதால் இது மிகப்பெரிய ஐபிஎல் தொடர் என்றும் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் மற்ற அணிகளை போலவே இந்த தொடரின் கோப்பையை கைப்பற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

மக்கள் மனதில் இயல்புநிலை

மக்கள் மனதில் இயல்புநிலை

ஐபிஎல்லின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் பேசிய உத்தப்பா, மீண்டும் போட்டிகளில் விளையாடுவது உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீசன் மக்கள் மனதில் இயல்புநிலையை கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல எதிர்காலம்

நல்ல எதிர்காலம்

இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிவீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பான வீரர் என்றும் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் உத்தப்பா தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் இந்திய அணியில் சிறப்பான இடத்தை பெறமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 11, 2020, 17:10 [IST]
Other articles published on Sep 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+